• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /CM விஜய்க்கு அரண்போல் பாதுகாப்பாக இருக்கும் பவுன்சர் மூஸா! 8 நாடுகளில் பிசினஸ் இருக்கு..

CM விஜய்க்கு அரண்போல் பாதுகாப்பாக இருக்கும் பவுன்சர் மூஸா! 8 நாடுகளில் பிசினஸ் இருக்கு..

முதல்வர் விஜய்க்கு, கடந்த சில ஆண்டுகளாக அரண் போல் பாதுகாப்பாக இருப்பவர், நயீம் மூஸா. இவருக்கு 8 நாடுகளில், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 04, 2026, 02:28 PM IST|Updated: Oct 04, 2026, 02:39 PM IST
joinshare
CM விஜய்க்கு அரண்போல் பாதுகாப்பாக இருக்கும் பவுன்சர் மூஸா! 8 நாடுகளில் பிசினஸ் இருக்கு..
Image Credit: CM Vijay Body Guard | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கஜகேசரி ராஜயோகம்: இன்று முதல் 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

கஜகேசரி ராஜயோகம்: இன்று முதல் 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

2

இனி 8 மணிநேர மின் வெட்டா...? தமிழ்நாடு அரசு கொடுத்த விளக்கம்

3

புதிய வாக்காளர் அடையாள அட்டை வாங்க சூப்பர் வாய்ப்பு! விண்ணப்பிக்க ரெடியா?

4

CM விஜய்க்கு அரண்போல் பாதுகாப்பாக இருக்கும் பவுன்சர் மூஸா! 8 நாடுகளில் பிசினஸ் இருக்கு..

5

வெற்றி மகளிர் கடன் திட்டம்: ரூ.5 கோடி வரை கடனுதவி.. யாருக்கெல்லாம்? எப்படி பெறுவது? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

முதல்வர் விஜய், நடிகராக இருந்த காலத்திலிருந்தே அவருக்கு பாதுகாப்பு வழங்குபவராக இருக்கிறார், நயீம் மூஸா. இவரை, யாரும் சாதாரண பாதுகாவலர் என நினைத்து விட வேண்டாம். இவருக்கு, 8 நாடுகளில் பல்வேறு தொழில்கள் இயங்கி வருகின்றன. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

முதல்வர் விஜய்யின் பாதுகாவலர்!

முதல்வர் விஜய், அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர், இருந்தே ஷூட்டிங்கிற்கு போனாலும் மக்களை சந்திக்க போனாலும் தன்னுடன் தன்னுடைய பாதுகாவலரான நயீம் மூஸாவையும் அழைத்து செல்வார். முதல்வர் விஜய் கலந்து கொண்ட பல்வேறு பொதுக்கூட்டங்களில், அவரை நோக்கி யாரேனும் ஓடி வந்தாலோ, அவரை நெருங்க முயற்சித்தாலோ அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி போடுவதை பார்த்திருப்போம். அப்போதிலிருந்து, ‘யார்ரா இவரு..’ என்று யோசித்திருப்போம். இங்கு அவர் குறித்துதான் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

நயீம் மூஸாவின் தொடக்கம்:

  • நயீம், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் கேரள மாநிலத்தில் இருக்கும் ‘மாகே’ எனும் பகுதியை சேர்ந்தவர்.
  • கேரள கலாச்சாரத்தில் வளர்ந்த இவர், தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை மாகேயிலேயே முடித்தார்.
  • மூஸாவிற்கு, இளம் வயதிலிருந்தெ உடற்கட்டமைப்பில் ஆர்வம் மிகுதி இருந்தது. இதனால் அவர் தினந்தோரும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு, தன்னுடைய உடலை அப்போதிலிருந்தே ஃபிட் ஆக வைத்திருந்தார்.
  • 2004ஆம் ஆண்டில், வேலைக்காக துபாய்க்கு சென்றார். அங்கு அவர் பணிபுரிந்து கொண்டிருந்த போதும், தொடர்ந்து ஜிம் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

தொழிலதிபர்:

  • மூஸாவிற்கு, துபாய்க்கு சென்ற போது சில அறிமுகங்கள் கிடைத்திருக்கிறது. இதன் மூலம், பகுதி நேரமாக சிலருக்கு அவர் பவுன்சராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.
  • தான் பவுன்சராக பணியாற்றிய அனுபவங்களை கொண்டு, 2008ஆம் ஆண்டு, தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து Kantoor Security Services எனும் பாதுகாப்பு பவுன்சர்களை வழங்கும் பாதுகாப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
  • கெண்டூர் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம், அரம்பத்தில் சாதாரணமான ஒரு நிறுவனமாகத்தான் தொடங்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிறுவனம்தான் துபாய், அபுதாபி, பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, இந்தியா மற்றும் சிங்கப்பூர்ர் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட நாடுகளில் தன் கிளைகளை வளர்த்து பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது.
  • இந்த நிறுவனம், துபாய்க்கு வருகை தரும் உலகப்புகழ் பெற்ற பாலிவுட், ஹாலிவுட் மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்களுக்கும், முக்கியமான அரசியல் தலைவர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதில் முதலிடத்தில் இருக்கிறது. சர்வதேச வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு இந்த நிறுவனம்தான் பாதுகாப்பு அளிக்கிறது. துபாய் காவல்துறை கூட, முக்கிய பாதுகாப்பு நிகழ்வுகளுக்கு இவர்களின் உதவியைத்தான் தேடுகின்றன.

மேலும் படிக்க | ஹோட்டல் மற்றும் பேக்கரிகளுக்கு தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை முக்கிய எச்சரிக்கை

நட்சத்திரங்களுடன் பழக்கம்..!

தமிழ் திரையுலக நட்சத்திரங்களான, சிலம்பரசன், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் உள்ளிட்டோருடன் நட்புடன் இருக்கின்றனர். அதே போல, மு.க.ஸ்டாலின் துபாய் சென்ற போது கூட இவருடைய நிறுவனம் முழு பாதுகாப்பு வழங்கியிருக்கிறது.

விஜய்யுடனான நட்பு..

விஜய்க்கும், நயீம் மூஸாக்கும் இடையிலிருக்கும் நட்பு, கிட்டத்தட்ட 20 அண்டுகால நட்பு என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் 2006ஆம் ஆண்டு முதலேயே நண்பர்களாக இருக்கின்றனர். தற்போது நயிம் மூஸாவுடன் சுமார் 10 பேர் இருக்கும் தொழில்முறை பவுன்சர்கள் குழு, விஜய்யின் பாதுகாப்பு படையில் இருக்கிறது.

மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி உதவித்தொகைக்கான தேர்வில் முறைகேடா? அப்டேட்

Add Zee News as a Preferred Source
TAGS:
Vijay Thalapathy