• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தேங்காய் மட்டை பிஸ்னஸ்... கோடிக்கணக்கில் சம்பாதித்த பெண் - முதலமைச்சருக்கு நன்றி

தேங்காய் மட்டை பிஸ்னஸ்... கோடிக்கணக்கில் சம்பாதித்த பெண் - முதலமைச்சருக்கு நன்றி

Tirupathur news : திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு கொடுத்த மானிய லோன் மூலம் தேங்காயம் மட்டை பிஸ்னஸில் கோடிக்கணக்கில் சம்பாதித்த பெண், தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் நன்றி தெரிவித்துள்ளார்,.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 08, 2026, 01:23 PM IST|Updated: Sep 08, 2026, 01:32 PM IST
joinshare
தேங்காய் மட்டை பிஸ்னஸ்... கோடிக்கணக்கில் சம்பாதித்த பெண் - முதலமைச்சருக்கு நன்றி
Image Credit: Tirupathur news

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

2

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

3

விலைவாசியை குறைங்க, பட்டினியா கிடக்க முடியல... விதவை பெண்ணின் தர்ணா போராட்டம்

4

அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்

5

மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tirupathur news : வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வேளான் விளைபொருட்களுக்கான 1100 மதிப்புகூட்டும் மையங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று தேங்காய் மட்டைகளை மதிப்புக்கூட்டிகோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாதனைப் பெண் சந்திரகலா ஆஞ்சி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நிறைந்த மனத்துடன் தங்களது நன்றியை தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையிலும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக விளைச்சல் அதிகமாகும் காலங்களில் வேளாண் விளை பொருட்கள் வீணாவதைத் தவிர்க்கும் நோக்குடன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம், மதிப்புக்கூட்டுதல் தொழில் தொடங்கும் தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்த, 100 மதிப்புக் கூட்டும் மையங்கள் அமைக்கும் திட்டம்” கடந்த நிதியாண்டில் (2025-2026) செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் ரூபாய் 10 கோடி வரையிலான புதிய திட்டங்களுக்கு 25 சதவீத முதலீட்டுமானியம் வழங்கப்படுகிறது.பெண்கள்,ஆதிதிராவிடர்மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் அட்டவணைப்படி, தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு, கூடுதலாக 10 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம், அவர்கள் அதிகபட்சமாக 35 சதவீதம் வரை, அதாவது ரூபாய் 1 கோடியே 50 லட்சம் மானியம் பெற தகுதியுடையவர் ஆவர். இது தவிர, அனைத்துப் பிரிவினருக்கும் 5 சதவீத வட்டி மானியம் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி வட்டாரம், பெரியகரகப்பட்டி பகுதியில், திரு. சந்திரகலா ஆஞ்சி அவர்களின் M/s அனுமான் தென்னை நார் நிறுவனம் சார்பில், ரூ.97.00 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், ரூ.24.13 இலட்சம் மானியத்தில், தென்னை மதிப்புக் கூட்டும் மையம் (கொப்பரை) அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற்று பயனடைந்த திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி வட்டாரத்தைச் சேர்ந்த அனுமன் காயர் உரிமையாளர் சந்திரகல ஆஞ்சி அவர்கள் தெரிவிக்கையில், "னது குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு சிறிய அளவில் தென்னை நார் மற்றும் கயிறு தயாரிக்கும் தொழிலை தொடங்கினேன். தொடக்க காலத்தில் பல்வேறு சிரமங்களை சந்தித்தாலும், எனது கணவரின் முழு ஒத்துழைப்புடன் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு, பல்வேறு இடங்களுக்குச் சென்று தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு தொழிலை படிப்படியாக வளர்த்தேன்.

தற்போது தேங்காய் மட்டைகளை மதிப்புக்கூட்டி தென்னை நார், கயிறு மற்றும் கோகோபீட் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். நார் தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவுகளையும் வீணாக்காமல் கோகோபீட் கட்டிகளாக மாற்றி விற்பனை செய்வதால் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.80 இலட்சம் முதல் ரூ1 கோடி வரை நிகர இலாபம் ஈட்டும் அளவிற்கு எனது தொழில் வளர்ச்சியடைந்துள்ளது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் 100 மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைக்கும் திட்டத்தின்” மூலம் அரசு மானிய உதவியுடன் வங்கிக் கடன் பெற்று, நவீன இயந்திரங்கள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. எனது தொழில் வளர்ச்சிக்கு இந்த அரசு திட்டம் மிகுந்த உதவியாக அமைந்துள்ளது.

இத்தொழிலின் மூலம் எனது குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளதுடன், தற்போது எங்கள் நிறுவனத்தில் சுமார் 20 கிராமப்புற பெண்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும் வழங்கி வருகிறேன். இதன் மூலம் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடிகிறது. மேலும், எதிர்காலத்தில் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாடுகளுக்கும் எங்களது மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்பதே எனது இலக்காகும். என்னைப் போன்ற தொழில் முனைவோருக்கு அரசு வழங்கும் மானியம், வங்கிக் கடன் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தொடர்ந்து கிடைத்தால், மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தொழிலை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

அரசின் திட்ட உதவியால் எனது தொழில் வளர்ச்சியடைந்து, எனது குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்ததுடன், பிற பெண்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நிறைந்த மணத்துடன் தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பயனாளி சந்திரகலா ஆஞ்சி தெரிவித்தார்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu