)
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தூணைச் சுற்றி மேடை அமைக்கும் பணியில் கோயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வலியுறுத்த வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கருத்து (மேலும் படிக்க)
மதுரை திருப்பரங்குன்றம் மலை முழுவதும் CRPF கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது. தீபம் ஏற்றும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பிரதமர் மோடியின் பதிவு, மு.க. ஸ்டாலின் விமர்சனம், இடதுசாரிகளின் பேரணி என தமிழக அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. (மேலும் படிக்க)
ஒரு அரசை நோக்கி இவ்வளவு காட்டமான வார்த்தைகளை உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை. இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழ்நாடு சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது" என திருப்பரங்குன்ற வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை சுட்டிக்காட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசை கடுமையாக சாடி உள்ளார்.
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன். அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது. உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்- “Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts” மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” என்று கூறியுள்ளது. இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை. இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம். சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை @actorvijay உணரவேண்டும். இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 28, 2026
திருப்பரங்குன்றம் அப்டேட்ஸ்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் இன்றைய தினம் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முழுவதும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் உள்ளது. தீபம் ஏற்ற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மலை மேல் செல்பவர்கள் பாதுகாப்பு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
தவெக எம்எல்ஏ கைது: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணைக்கு பின்னர் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அருள் விக்னேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். டிசம்பர் 11ஆம் தேதிவரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.
வானிலை அப்டேட்: நீலகிரி, கோவை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.