பள்ளிகள் விடுமுறை: தொடர் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அலர்ட் கனமழை: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழை அல்ர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காவலர் வீரவணக்க நாள்: நாட்டின் பாதுகாப்புக்காகவும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் உயிர்த்தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.