SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil Nadu news Live : தவெக எம்எல்ஏ விவகாரம், திமுக அடுத்தக்கட்ட நடவடிக்கை, ரேஷன் கார்டு அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu news Live : கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீதான புகாரை விசாரிக்க சிறப்புக்குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு, ரேஷன் கார்டு முக்கிய அப்டேட், தவெக எம்எல்ஏ மீதான புகாரை மறைத்த தலைமை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்..

Written By Karthikeyan Sekar
Published: Nov 26, 2026, 09:38 IST | Updated: Nov 26, 2026, 10:05 IST
Image Credit: Tamil Nadu News Live Today
Join

Tamil Nadu News Live Today : கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகாரை விசாரிக்க சிறப்புக் குழுவை நியமித்தது தமிழ்நாடு அரசு, இந்த புகாரை மறைத்த தலைமை செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல், ரேஷன் கார்டு இலவச பயனாளிகளை மறு ஆய்வு செய்ய அரசு திட்டம் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.....

26 Nov 2026 10:02 IST

TN Ration Card News: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள் திட்டம்

வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கூடுதலாக 2 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருநங்கையர், கைம்பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. (மேலும் படிக்க)

 

26 Nov 2026 09:55 IST

8th Pay Commission Update: பதவி உயர்வு விதிகளில் மாற்றம்

மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக் குழு உறுப்பினர்கள் பரிந்துரைகளை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது... (மேலும் படிக்க)

26 Nov 2026 09:45 IST

Kallakurichi MLA Row: ஆளுநரை சந்திக்கும் உதயநிதி

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி அவருக்கு மன உளைச்சலை கொடுத்ததாக தவெக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிரான நடவடிக்ககளைத் தீவிரப்படுத்தக் கோரி தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்கவுள்ளார்... (மேலும் படிக்க)

26 Nov 2026 09:42 IST

Tamil Nadu Senior Citizen Health Insurance : தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள சூப்பர் அப்டேட்

Tamil Nadu Senior Citizen Health Insurance : தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவது தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

 

26 Nov 2026 09:40 IST

Tamil Nadu Teachers Salary Hike : இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் ரூ.88,000 வரை உயர்வு

Tamil Nadu Teachers Salary Hike : தமிழ்நாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES