SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE: 5 மாவட்டங்களுக்கு லீவ்; தடம் புரண்ட ரயில் எஞ்சின்; IND vs NZ டி20ஐ

Tamil News LIVE Updates: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; தமிழ்நாடு வானிலை நிலவரம்; இந்தியா - நியூசிலாந்து முதல் டி20ஐ போட்டி உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளை உடனடி அப்டேட்ஸ் இதோ

Written By Sudharsan G
Published: Oct 22, 2026, 09:39 AM IST | Updated: Oct 22, 2026, 12:21 PM IST
Join

பள்ளிகள் விடுமுறை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் மற்றும் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IND vs NZ: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது. கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும்.
 

22 Oct 2026, 12:20 PM

PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டியவை

உங்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் PF தொகை எவ்வாறு சேமிக்கப்படுகிறது? நிறுவனத்தின் பங்களிப்பு எவ்வளவு? பென்ஷன் தொகை எப்படி உருவாகிறது? EPF பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் எளிமையாக தெரிந்துகொள்ள... (மேலும் படிக்க)

22 Oct 2026, 12:06 PM

LIC நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா?

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL), தனது 'அப்ரண்டிஸ்ஷிப் புரோகிராம்-010' (Apprenticeship Program-010) திட்டத்தின் கீழ் 232 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இத்திட்டத்தின் நோக்கம், பட்டதாரிகளுக்கு நடைமுறை பணி அனுபவம், தொழில்முறைத் திறன்கள் மற்றும் நிதிச் சேவைகள் துறை குறித்த அறிவாற்றலை வழங்குவதாகும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 20 முதல் நவம்பர் 1, 2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த அப்ரண்டிஸ் பயிற்சி 12 மாத காலத்திற்கு நடைபெறும்... (மேலும் படிக்க)
 

22 Oct 2026, 11:12 AM

Tamil News LIVE: மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மெட்ரோ நிர்வாகம் மாற்றி உள்ளது. நாளை (அக்டோபர் 23) முதல் மஞ்சள் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

22 Oct 2026, 11:11 AM

Tamil News LIVE: வண்டலூர் பூங்கா இன்று முதல் மூடல்

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு பார்வையாளர்களுக்கு 2 நாட்கள் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பிறகு, வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம்போல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
 

 

22 Oct 2026, 10:59 AM

டிஏ உயர்வு எப்போது?

மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் ஏமாற்றதை எதிர்கொண்டுள்ளனர். ஜூலை 2026 முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு நேற்று (ஆக்டோபர் 21) அன்று வரும் என வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு எதுவும் வரவில்லை. இது ஊழியர்களுக்கு ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது... (மேலும் படிக்க)

22 Oct 2026, 10:32 AM

Tamil News Live : யூ-ட்யூபர் ஜேசன் சாமுவேல் கைது

இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் மரண வழக்கில் பிரபல யூ-ட்யூபர் ஜேசன் சாமுவேல் இன்று (அக். 22) புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (மேலும் படிக்க)

22 Oct 2026, 9:53 AM

சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில்

ஹைதராபாத் - சென்னை புல்லட் ரயில் வழித்தடம் சுமார் 750 முதல் 778 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இதில் மொத்தம் 18 நிலையங்கள் இடம்பெறும். இந்தத் திட்டம் நிறைவடையும் போது, ​​தற்போது 12 முதல் 14 மணிநேரம் எடுக்கும் பயண நேரம், வெறும் 3 மணிநேரமாகக் குறையும்... (மேலும் படிக்க)

22 Oct 2026, 9:44 AM

Tamil News Live : தடம் புரண்ட பிலாஸ்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின்

குமரி - கேரள எல்லையான நெய்யாற்றின்கரை பாறசாலை இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பிலாஸ்பூர் - திருநெல்வேலி ரயில் எஞ்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. (மேலும் படிக்க)

22 Oct 2026, 9:43 AM

Tamil News Live : புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை (அக். 23) உருவாகிறது. நாளை உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES