Tamil News LIVE: வங்கக்கடலில் ’அர்னாப்’ புயல்.. 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லைவ் அப்டேட்ஸ்
Tamil News LIVE Updates: மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது வங்கக்கடலில் ‘அர்னாப்’ புயல் உருவாகியுள்ளது. கனமழை காரணமாக கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், ராட்சத பாறைகளை அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
26 Oct 2026, 11:42 AM
Cyclone Arnab News:அர்னாப் புயல் எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் வேகமாக வலுப்பெற்று வருகிறது. ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். (மேலும் படிக்க)
26 Oct 2026, 11:36 AM
World News Tamil: செர்பியாவில் மாணவர்கள் ஆட்சி
செர்பியாவில் மாணவர் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டங்களை நடத்திய மாணவர் அமைப்பினர் பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளனர். (மேலும் படிக்க)
26 Oct 2026, 11:12 AM
Rahul Gandhi News: ராகுல் காந்தி பயணத்தின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்
சுல்தான்பூர் நீதிமன்ற ஆஜருக்குச் செல்லும் வழியில் ராகுல் காந்தியின் வாகன அணியில் தொடர் மோதல் விபத்து ஏற்பட்டது. பலர் காயமடைந்த நிலையில், ராகுல் காந்தி பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்ன நடந்தது? (மேலும் படிக்க)
26 Oct 2026, 10:56 AM
Arnab Cyclone News: மீனவர்களுக்கு அவசர அறிவிப்பு
தென்கிழக்கு-தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக-புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனப் பணிவோடு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கரைப்பகுதிகள் அல்லது துறைமுகங்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
26 Oct 2026, 10:47 AM
Rain News In Tamil: 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'அர்னாப்' புயலாக தீவிரமடைந்துள்ளது. இது ஆந்திரா - ஒடிசா கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயல் உருவாக்கம்: மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து 'அர்னாப்' புயலாக மாறியுள்ளது.
புயலின் நகர்வு: இப்புயல் மேலும் பலமடைந்து, ஆந்திரம் - ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை கூண்டு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 முக்கிய துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
26 Oct 2026, 10:42 AM
Gold Rate In Chennai: தங்கம் விலை உயர்வு!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 1,04,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 13085க்கு விற்கப்படுகிறது.
26 Oct 2026, 10:40 AM
World News Tamil: பிரேசில் தேர்தலில் வெற்றி பெற்ற லூலா யார்?
பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா டா சில்வா 51.8% வாக்குகளுடன் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார். தேர்தல் சர்ச்சைகள், போல்சோனாரோவின் எதிர்ப்பு மற்றும் உலக அரசியல் தாக்கம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். (மேலும் படிக்க)
26 Oct 2026, 10:21 AM
Tamil News LIVE: ஆவின் பால் உற்பத்தி நிறுத்தமா?
ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தம் குறித்த செய்திகள் முற்றிலும் தவறானவை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பால், நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு, தடையின்றி விநியோகிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
26 Oct 2026, 9:52 AM
School Holiday: பள்ளிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (அக்டோபர் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
26 Oct 2026, 9:51 AM
நாளை முதல் வறண்ட வானிலை
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்து, நாளை முதல் நவம்பர் 1 வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.