SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

PM சூர்யா கர் திட்டத்தில் தமிழக அரசின் கூடுதல் மானியத்தால் விண்ணப்பங்கள் இருமடங்கு அதிகரித்துள்ளது. முழுமையான வழிகாட்டியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 11, 2026, 04:19 PM IST | Updated: Oct 11, 2026, 04:24 PM IST
Join

மத்திய அரசின் பிஎம் சூர்யா கர் (PM Surya Ghar) திட்டத்தின் கீழ் வீடுகளின் கூரைகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பயனாளிகளுக்கு, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் டாப்-அப் மானியம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்திய அரசின் மானியத்துடன் மாநில அரசின் மானியமும் இணைந்திருப்பதால், சோலார் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளன.  

தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் (TNGECL) திருச்சி மாவட்டத்திற்கு மார்ச் 31, 2027-க்குள் 3,653 சோலார் இணைப்புகளை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. வழக்கமாக 1,000 விண்ணப்பங்கள் வர ஐந்து முதல் ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், இத்திட்டம் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே 1,020 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதில் ஏற்கனவே 183 வீடுகளில் சோலார் தகடுகள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன.  

மத்திய மாநில அரசுகளின் மானிய விவரம்:

ஆகஸ்ட் 5 முதல் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்குத் தமிழ்நாடு அரசின் இந்த கூடுதல் டாப்-அப் மானியம் வழங்கப்படுகிறது.  

1 கிலோவாட் (1 KW): இதன் நேரடி முதலீடு சுமார் ரூ.77,500 ஆகும். இதில் மத்திய அரசின் மானியம் ரூ.30,000 மற்றும் மாநில அரசின் கூடுதல் மானியம் ₹5,000 என மொத்தம் ரூ.35,000 மானியம் போக, பயனாளி செலுத்த வேண்டிய தொகை வெறும் ரூ.42,500 மட்டுமே.  

2 கிலோவாட் (2 KW): இதன் மொத்த முதலீடு சுமார் ரூ.1.42 லட்சம். மத்திய அரசு ரூ.60,000 மற்றும் மாநில அரசு ரூ.10,000 மானியம் வழங்குகிறது. இதனால் பயனாளி செலுத்த வேண்டிய தொகை ரூ.72,500 ஆகக் குறைகிறது.  

3 கிலோவாட் (3 KW): இதன் மொத்த செலவு ரூ.2 லட்சம் ஆகும். இதில் மத்திய அரசின் மானியம் ரூ.78,000 மற்றும் தமிழக அரசின் கூடுதல் மானியம் ரூ.22,000 என மொத்தம் ரூ.1 லட்சம் வரை மானியமாகவே கிடைக்கிறது. பயனாளி வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே முதலீடு செய்தால் போதுமானது.  

மின் கட்டணம் எப்படி குறையும்?

வீடுகளில் சோலார் மின் உற்பத்தி அமைப்பை நிறுவுவதன் மூலம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வரும் மின்சாரக் கட்டணம் பெருமளவு குறைகிறது:  

1 KW திறன்: வழக்கமாக 60 நாட்களுக்கு ரூ.540 முதல் ரூ.800 வரை வரும் மின்கட்டணம், சோலார் அமைத்த பிறகு வெறும் ரூ.110 ஆகக் குறையும்.  

2 KW திறன்: முன்பு ரூ.2,000 முதல் ரூ.3,200 வரை வந்த மின்கட்டணம், சோலார் பயன்பாட்டிற்குப் பின் ரூ.220 ஆகக் குறையும்.   
3 KW திறன்: பொதுவாக ரூ.2,500 முதல் ரூ.5,000 வரை வரக்கூடிய மின்கட்டணம், வெறும் ரூ.330 ஆகச் சரியும்.  

விண்ணப்பிக்கும் முறை மற்றும் அரசு நடைமுறைகள்:

பொதுமக்கள் 'PM Surya Ghar' என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் விண்ணப்பங்களை ஆய்வு செய்து அனுமதி வழங்கும். அதன்பின் அரசு அங்கீகரித்த விற்பனையாளரைத் தேர்ந்தெடுத்து சோலார் அமைப்புகளை நிறுவலாம்.  

பொருத்தப்பட்ட பின் TNPDCL அதிகாரிகள் ஆய்வு செய்து சோலார் மீட்டர்களைப் பொருத்துவார்கள். பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்குள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.  

30 ஆண்டுகள் ஆயுட்காலம் – 3 ஆண்டுகளில் முதலீடு திரும்பக் கிடைக்கும்:

சோலார் பேனல்கள் 30 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் ஆயுட்காலம் கொண்டவை. இதற்கு வழக்கமான தூய்மைப்படுத்தல் மற்றும் தண்ணீர் கொண்டு கழுவுதல் போன்ற எளிய பராமரிப்பே போதுமானது. இதில் செய்யப்படும் முதலீட்டை மின்கட்டண சேமிப்பு மூலமாகவே வெறும் மூன்றே ஆண்டுகளில் பயனாளிகள் முழுமையாகத் திரும்பப் பெற்றுவிட முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகள் குறைந்த வட்டியில் கடனுதவிகளையும் வழங்கி வருகின்றன.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES