PM Modi Marks Historic Milestone: அரசுத் தலைவராக 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக பதவி வகித்த முக்கிய மைல்கல்லை பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற சேவா ஜோதி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த சாதனைக்கு இந்திய மக்களின் நம்பிக்கையே காரணம் என தெரிவித்தார். மேலும், We Can Do It என்ற புதிய முழக்கத்தை அறிமுகப்படுத்தி, 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாட்டை முன்னேற்ற உறுதியளித்தார்.
பொது சிவில் சட்டத்தை 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 21 NDA ஆளும் மாநிலங்களில் அமல்படுத்துவது பாஜகவின் முக்கிய அரசியல் இலக்காக உருவெடுத்துள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அவசியமாக இருக்கலாம். TDP, JDU மற்றும் LJP (ராம்விலாஸ்) ஆகியவை UCCயை நேரடியாக எதிர்க்கவில்லை என்றாலும், சட்டத்தின் வரைவு, பல்வேறு சமூகங்களுடனான ஆலோசனை, பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் அரசியலமைப்புச் சிறப்புப் பாதுகாப்புகள் குறித்து தெளிவு தேவை என்று கூறுகின்றன. இதனால் UCC அமலாக்கம் என்பது சட்டம் இயற்றுவது மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் சமூக கருத்தொற்றுமையை உருவாக்கும் சவாலாகவும் மாறியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளர் என தவெக எம்எல்ஏக்கள் தொடர்ச்சியாக கூறி வருவது குறித்து தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பதிலை இங்கு விரிவாக காணலாம்.
சில நாட்களுக்கு முன்பாக, தவெக சட்டமன்ற உறுப்பினர் மூஸ்தபா, ‘அமரன்’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களை காண்பித்த விதம் குறித்து விமர்சித்திருந்த நிலையில், இதை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
TN BJP President: தமிழக பாஜக மாநில தலைவரை மேலிடம் விரைவில் மாற்ற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக மாநில தலைவர் ரேஸில் 4 பேர் உள்ளன. எனவே, யார் அடுத்த பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது.
Nainar Nagendran Controversy: முதலமைச்சர் விஜய் குறித்தும், அவரது தாயார் குறித்தும் அநாகரீகமான முறையில் நயினார் நாகேந்திரன் பேசியதாக சர்ச்சை வெடித்துள்ளது. அமைச்சர் அருண்ராஜ் உள்ளிட்டோர் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.