SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு விதிகளில் மாற்றம்? இனி அதிகம் காத்திருக்க வேண்டாம்

8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு விதிகளை மறுஆய்வு செய்யுமாறு, 'ஃபெடரேஷன் ஆஃப் நேஷனல் போஸ்டல் ஆர்கனைசேஷன்ஸ்' (FNPO) அமைப்பு ஊதியக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. தற்போதைய விதிகளின்படி, பல ஊழியர்கள் அடுத்த நிலைக்குப் பதவி உயர்வு பெற 10 முதல் 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 26, 2026, 08:38 IST | Updated: Nov 26, 2026, 08:42 IST
Image Credit: 8th Pay Commission Update
Join

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக் குழு உறுப்பினர்கள் பரிந்துரைகளை இறுதி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழு தொடர்பான முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு

அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு விதிகளை மறுஆய்வு செய்யுமாறு, 'ஃபெடரேஷன் ஆஃப் நேஷனல் போஸ்டல் ஆர்கனைசேஷன்ஸ்' (FNPO) அமைப்பு ஊதியக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. தற்போதைய விதிகளின்படி, பல ஊழியர்கள் அடுத்த நிலைக்குப் பதவி உயர்வு பெற 10 முதல் 12 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இது அவர்களின் பணி முன்னேற்றத்தைத் தடுப்பது மட்டுமின்றி, அவர்களுக்குப் பெரும் நிதி இழப்பையும் ஏற்படுத்துகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்க்க, 8வது ஊதியக் குழுவின் தலைவரான ரஞ்சனா பிரகாஷ் தேசாய்க்கு, FNPO அமைப்பு நவம்பர் 20, 2026 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், பதவி உயர்வுக்குத் தேவையான 'குறைந்தபட்ச தகுதிக்கால' (minimum qualifying service) விதிகளை மறுஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வில் தேக்கநிலை

பல ஊழியர்கள் 10–12 ஆண்டுகள் பணிபுரிந்தும் பதவி உயர்வு கிடைக்காமல் தேக்கநிலை நீடிக்கிறது. செப்டம்பர் 2022-ல் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, இந்த விதிகளில் உள்ள முரண்பாடுகளை FNPO சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அமைப்பின் கூற்றுப்படி, பல்வேறு ஊதிய நிலைகளில் (pay levels) பதவி உயர்வு பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசம், பல பதவிகளுக்கு மிக நீண்டதாக உள்ளது.

உதாரணமாக,

ஒரே ஊதிய நிலையில் உள்ள ஊழியர்களுக்கு, பதவி உயர்வு விதிகளில் இத்தகைய பெரும் வேறுபாடுகள் இருப்பது முற்றிலும் நியாயமற்றது என்று FNPO வாதிடுகிறது.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: இனி ஒவ்வொரு ஆண்டும் 6% ஊதிய உயர்வு? அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்

காலியாக உள்ள முக்கிய பதவிகள்

அஞ்சல் துறையில் பல முக்கியப் பதவிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. பதவி உயர்வு செயல்முறை மிகவும் மெதுவாக இருப்பது, அஞ்சல் துறையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சிக்கலான விதிமுறைகள் மற்றும் தகுதியுள்ள பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக, லோயர் செலக்‌ஷன் கிரேடு (LSG), ஹையர் செலக்‌ஷன் கிரேடு-II (HSG-II), ஹையர் செலக்‌ஷன் கிரேடு-I (HSG-I) மற்றும் தபால் நிலைய கண்காணிப்பாளர் (Superintendent of Post Offices) போன்ற பல முக்கியமான பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளன.

மேலும், தபால் துறை மற்றும் ரயில்வே அஞ்சல் சேவை (RMS) பிரிவுகளில் உள்ள பல்வேறு மேற்பார்வை மற்றும் மேலாண்மை நிலை பணியிடங்களும் காலியாகவே உள்ளன. இந்தப் பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்பத் தவறியது, துறையின் அன்றாட செயல்பாடுகளை நேரடியாகப் பாதித்து வருகிறது.

தற்போதுள்ள பணியாளர்கள் மீது அதிகரிக்கும் பணிச்சுமை

பதவி உயர்வுகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. காலியாக உள்ள பணியிடங்களின் கூடுதல் பொறுப்புகளையும் அவர்களே சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலால், செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலும், முக்கியமான முடிவுகளை எடுப்பதிலும், புதிய துறைசார் முன்னெடுப்புகளைச் செயல்படுத்துவதிலும் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுவதாக அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இது வழக்கமான தபால் சேவைகளை மட்டுமல்லாமல், தபால் நிலையங்கள் வாயிலாக வழங்கப்படும் வங்கி மற்றும் காப்பீட்டுச் சேவைகள், மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பிற அத்தியாவசிய சேவைகளையும் நேரடியாகவும் பாதகமாகவும் பாதிக்கக்கூடும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: லெவல் 1 முதல் 10 வரை.... அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா?

8வது ஊதியக் குழுவிடம் இந்த அமைப்பு எதிர்பார்ப்பது என்ன?

FNPO அமைப்பின் முக்கிய கோரிக்கைகள்:

பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு: பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச பணிக்காலத்தை நிர்ணயிக்கும் போது, ​​ஊழியரின் பணித்தன்மை, பொறுப்புகள், காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை முழுமையாகக் கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று FNPO அமைப்பு 8-வது ஊதியக் குழுவை வலியுறுத்தியுள்ளது.

விதிகளின் மறுஆய்வு: அனைத்து நிலைகளிலும் உள்ள பதவி உயர்வு விதிகளை மறுஆய்வு செய்து, ஒவ்வொரு ஊழியருக்கும் உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த அமைப்பு கோருகிறது.

FNPO-வின் கருத்துப்படி, ஒரே பணியிடத்தில் பல ஆண்டுகள் நீடிப்பது ஊழியர்களின் மன உறுதியைக் குலைப்பதோடு, பதவி உயர்வுடன் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் பிற படிகளைப் பெறுவதிலும் பெரும் தாமதத்தை ஏற்படுத்துகிறது. பதவி உயர்வு விதிகளில் மாற்றங்களைக் கோரும் இந்த கோரிக்கை நிறைவேறினால், அது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: ரூ.25,000 டு ரூ.68,750... ஓய்வூதியதாரர்களுக்கு அட்டகாசமான ஓய்வூதிய உயர்வு காத்திருக்கு
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES