SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8வது ஊதியக் குழு: லெவல் 6-8 அரசு ஊழியர்களுக்கு 1 லட்சத்தைத் தாண்டும் அடிப்படை ஊதியம்!!

8th Pay Commission: புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு ஊதிய உயர்வு எந்த அளவில் இருக்கும் என்பது பெரும்பாலும் 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' அளவைப் பொறுத்தே அமையும். 7-வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை 3.0-க்கு மேல் உயர்த்துமாறு பல அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 07, 2026, 07:46 AM IST | Updated: Oct 07, 2026, 08:00 AM IST
Join

8th Pay Commission: 8வது ஊதியக் குழு தனது பணிகளை முழு முனைப்புடன் செய்து வருகிறது. ஊதிய ஆணையம் தனது பரிந்துரைகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அரசிடம் சமர்ப்பிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இக்குழுவின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் இந்த மாதத்தில் நடைபெறவுள்ளன.

8வது ஊதியக் குழு கூட்டங்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடும் 8வது ஊதியக் குழு, பின்னர் மும்பைக்குச் சென்று அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளது. இந்த கூட்டங்களில் சில முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது,

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான கட்டம்

இதற்கு முன் நடந்த கூட்டங்களில் ஊதியம், ஓய்வூதியம், ஃபிட்மென்ட் ஃபேக்டர் (fitment factor) மற்றும் பணி தொடர்பான பிற விவகாரங்கள் குறித்து முக்கிய தொழிலாளர் சங்கங்களும் ஓய்வூதியதாரர் அமைப்புகளும் ஏற்கனவே தங்கள் கவலைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளன. இதற்கிடையில், மத்திய அரசு ஊழியர்கள் 8-வது ஊதியக் குழுவின் கீழ் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய ஊதியத்தைக் கணக்கிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஃபிட்மென்ட் ஃபேக்டருக்கு முக்கிய பங்கு

ஊதிய உயர்வு கணக்கீட்டில் மிக முக்கியப் பங்கு வகிப்பது 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' ஆகும். இதனை உயர்த்துமாறு தொழிலாளர் சங்கங்கள் பரிந்துரைத்துள்ளன. நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த ஊதியக் குழு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தொழிலாளர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு ஊதிய உயர்வு எந்த அளவில் இருக்கும் என்பது பெரும்பாலும் 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' அளவைப் பொறுத்தே அமையும். 7வது ஊதியக் குழுவின் கீழ் 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அதனை 3.0-க்கு மேல் உயர்த்துமாறு பல அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.

மேலும் படிக்க | திருப்பதி ரூ.300 ஸ்பெஷல் தரிசன டிக்கெட் புக்கிங் தொடக்கம்! எப்படி புக் செய்வது?

3.83 ஃபிட்மென்ட் ஃபேக்டரை அமல்படுத்தப் பரிந்துரை

ஃபிட்மென்ட் ஃபேக்டரை உயர்த்துமாறு வலியுறுத்தும் அமைப்புகளில் 'தேசிய கூட்டு ஆலோசனைக் குழு'வும் (NC-JCM) ஒன்றாகும். இது 3.833 என்ற அளவைப் பரிந்துரைத்துள்ளது. புதிய அடிப்படை ஊதியத்தைத் தீர்மானிக்கவே இந்த ஃபிட்மென்ட் ஃபேக்டர் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அடிப்படையில் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் போக்குவரத்துப் படி போன்ற பிற படிகள் தனித்தனியாகக் கணக்கிடப்படுகின்றன.

அறிக்கை சமர்ப்பிப்பதற்கான 18 மாத காலக்கெடுவில் ஏற்கனவே 11 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், ஊதியக் குழு தனது அறிக்கையை மே மாதத்திற்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவதற்கு ஊழியர்கள் மேலும் மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

அறிக்கை மத்திய அரசை அடைந்ததும், அமைச்சர்கள் அடங்கிய குழு அதனை ஆய்வு செய்யும். அவர்கள் முன்வைக்கும் பரிந்துரைகள் மாற்றங்களாகச் சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் அவை நடைமுறைப்படுத்தப்படும்.

லெவல் 6,7, 8 அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு

8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்குப் பிறகு நிலை 6, 7 மற்றும் 8 -இல் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு உயரக்கூடும் என்பதை இங்கே காணலாம்.

மேலும் படிக்க | TAMCO, TABCEDCO அரசு கடன் முகாம்: எந்தெந்த தொழில்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? – முழு விவரம்!

லெவல் 8 மத்திய அரசு ஊழியர்கள்

₹47,600 அடிப்படை ஊதியம் கொண்ட நிலை 8 ஊழியருக்கு, 8-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அகவிலைப்படி (DA) மற்றும் வீட்டு வாடகைப்படி (HRA) போன்ற கூறுகள் உட்பட மொத்த ஊதியம் ₹1 லட்சத்தைத் தாண்டும். 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டரைப் பயன்படுத்தி அடிப்படை ஊதியத்தைக் கணக்கிடும்போது, ​​மொத்த ஊதியம் (gross salary) ₹1,22,332 ஆக அமைகிறது.

லெவல் 7 மத்திய அரசு ஊழியர்கள்

அதேபோல, ₹44,900 அடிப்படை ஊதியம் கொண்ட நிலை 7 ஊழியர் ஒருவர், 8வது ஊதியக் குழுவின் கீழ் ₹1,15,393 மொத்த ஊதியத்தைப் பெறுவார்.

லெவல் 6 மத்திய அரசு ஊழியர்கள்

நிலை 6 ஊழியர்களின் மொத்த ஊதியம் 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் அடிப்படையில் ₹35,400-லிருந்து ₹90,978 ஆக உயரும்.

ஊதிய உயர்வு மதிப்பீடுகள் (2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டருல்)  சுருக்கமாக...

ஊழியர்களின் பே லெவல்தற்போதைய ஊதியம்மதிப்பிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட ஊதியம்
லெவல் 6₹35,400₹90,978
லெவல் 7₹44,900₹1,15,393
லெவல் 8₹47,600₹1,22,332

பல்வேறு அமைப்புகளின் பரிந்துரை

7வது ஊதியக் குழுவின் கீழ் அரசு ஃபிட்மென்ட் ஃபேக்டரை உயர்த்தியிருந்தது. 6-வது ஊதியக் குழுவில் 1.86-ஆக இருந்த இக்காரணி, 7-வது ஊதியக் குழுவில் 2.57-ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல், 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க | EPS Pension: ரூ.30,000 சம்பளம், 10 ஆண்டு சர்வீஸ், மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES