SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஷகிலாவுக்கு வந்த நிலை.. செல்போன் பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்னையா? உஷார்

Actor Shakeela Neck Surgery: தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் கழுத்து வலி ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். எனவே, செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Aug 14, 2026, 03:00 PM IST | Updated: Aug 14, 2026, 03:14 PM IST
Join

Actor Shakeela Neck Surgery:  பிரபல நடிகை ஷகிலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பு தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.  நடிககை ஷகிலா கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ரூ.3 லட்சம் செலவில்  கழுத்து அறுவை சிசிச்சை ஷகிலா செய்துள்ளார்.  நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பால் ஷகிலா கழுத்தில் அறுவை சிசிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஷகிலா கழுத்தில் அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஷகிலா, தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், பல மணி நேரம் தவறான நிலையில் படுத்தப்படி செல்போனில் கேம், யூடியூப், ரீல்ஸ் பார்த்து இருந்ததாகவும், தொடர்ச்சியாக 4 மணி நேரம் செல்போனை பயன்படுத்தியதாக குறிப்பிட்டார்.

பல மணி நேரம் பக்கவாட்டில் படுத்துக்கொண்டு மொபைல் கேம்களை விளையாடியும், ரீல்களைப் பார்த்தும் வந்ததாகவும், அதனால் தனது கழுத்தில் உள்ள நரம்புகள் சேதமடைந்திருக்கலாம் என்றும் நம்புவதாகக் கூறினார்.  எனவே, நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, செல்போன் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்னைகள் வரலாம் என்பது குறித்து பார்ப்போம்.

நீண்ட செல்போன் பயன்படுத்தினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது, குறிப்பாக தொடர்ந்து ஒரே நிலையில் உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு பயன்படுத்துவது, உடலில் பல பகுதிகளில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தும்போது, குறிப்பாக  ஒருபுறமாக படுத்துக் கொண்டு  செல்போன் பார்ப்பது அல்லது பல மணி நேரம் கழுத்தை வளைத்த நிலையில் வைத்திருப்பது கழுத்து, முதுகெலும்பு அதைச் சுற்றியுள்ள தசைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

கழுத்து, தோல்பட்டை தசைகளில் அழுத்தம் அதிகரிக்கலாம். செல்போன் பார்க்கும்போது உடலை முன்புறமாக வளைத்துக் கொள்வது முதுகின் நிலையை பாதிக்கலாம். நீண்ட நேரம் ஒரே நிலையில் இருந்தால், கழுத்து, முதுகுவலி, தசை இறுக்கம் ஏற்படலாம். மேலும், கண் சேர்வு, தலைவரி ஆகியவையும் ஏற்படக் கூடும். குறிப்பாக, நீண்ட நேரம் செல்போன் பார்ப்பது தூக்கத்தையும் பாதிக்கும்.

கழுத்து வலி வராமல் இருக்க என்ன செய்யலாம்?

செல்போனை கண்களின் உயரத்திற்கு அருகில் வைத்து பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். செல்போன் பயன்படுத்தும்போது, அடிக்கடி உங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். உட்கார்ந்து, நின்றுக் கொண்டு, நேரமாக படுத்துக் கொண்டு என உங்கள் நிலையை மாற்றி செல்போனை பயன்படுத்த வேண்டும். 

மேலும், ஒரே பக்கமாக படுத்துக் கொண்டு நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். செல்போனை தொடர்ச்சியை மணிக்கணக்கில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். செல்போன் பயன்படுத்துவது இடைவெயில் எடுத்துக் கொண்டு பயன்படுத்துவது, கழுத்தில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவும்.

இருப்பினும், தொடர்ந்து கழுத்து வலி, தோள்பட்டை வலி, கழுத்தை அசைப்பதில் சிரமம்,  விரல், கை வலி போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இதுபோன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  செல்போனை கீழே பார்த்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக கண்களின் உயரத்திற்கு அருகில் வைத்து பயன்படுத்துங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES