UPI மூலம் EPF பணத்தை எடுக்கும் வசதி எப்போது தொடங்கும்? தொழிலாளர் அமைச்சகம் முக்கிய தகவல்
EPFO UPI Withdrawal: அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் EPFO உறுப்பினர்கள் தங்கள் PF நிதியை BHIM UPI மூலம் நேரடியாகத் தங்கள் UPI-இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பெற முடியும். இந்தக் புதிய வசதியானது, கோரிக்கை தீர்வு செயல்முறையை (claim settlement process) முன்பை விட வேகமாகவும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாகவும், மிகவும் வசதியானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வரும் நாட்களில் சில முக்கிய செய்திகள் காத்திருக்கின்றன. EPFO 3.0 இன்னும் சில வாரங்களில் முழுமையாக அமலுக்கு வரும் என நம்பப்படுகின்றது. EPFO 3.0 கட்டமைப்பின் கீழ், இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளிலிருந்து ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தியும், UPI மூலமாகவும் பணத்தை எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான EPFO கணக்குதாரர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இனி மக்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை எடுக்க நீண்ட நடைமுறைகளையோ அல்லது நீண்ட நேரக் காத்திருப்பையோ எதிர்கொள்ள வேண்டியதில்லை.
இந்த வசதி உறுப்பினர்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கும். இனி இபிஎஃப் கணக்கின் செயல்முறைகளும் வங்கிக் கணக்குகளை போல எளிதாகிவிடும்.
செப்டம்பர் முதல் ஜாக்பாட்
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் EPFO உறுப்பினர்கள் தங்கள் PF நிதியை BHIM UPI மூலம் நேரடியாகத் தங்கள் UPI-இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பெற முடியும். இந்தக் புதிய வசதியானது, கோரிக்கை தீர்வு செயல்முறையை (claim settlement process) முன்பை விட வேகமாகவும், டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாகவும், மிகவும் வசதியானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
EPF செயல்முறை: எது மாறுகிறது? எதில் மாற்றம் இல்லை?
- UPI மூலம் நிதியைப் பெறுவது என்பது எப்போது வேண்டுமானாலும் அல்லது எந்தக் காரணத்திற்காகவும் PF பணத்தை எடுக்கலாம் என்று அர்த்தமல்ல என்பதை கணக்குதாரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
- PF பணத்தை எடுப்பது தொடர்பான தற்போதைய விதிகள் மற்றும் தகுதி அளவுகோல்களில் எந்த மாற்றமும் இருக்காது.
- இந்த மாற்றம் பணம் செலுத்தும் முறை மற்றும் கோரிக்கை செயல்முறையை எளிதாக்குவதற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
EPF புதிய வசதி
இந்தக் புதிய வசதி எவ்வாறு செயல்படும்? PF கணக்குதாரர்களுக்கு இது என்ன நன்மைகளை அளிக்கும்?
- ஒரு மாதத்திற்குள் UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
- தொழிலாளர் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள், இந்த அமைப்பு ஒரு மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளன.
- EPFO சேவைகளை நவீனமயமாக்குவதற்கும், ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் சேவையைப் பெறுவதில் சிறந்த அனுபவத்தை வழங்குவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
EPFO UPI உடன் எவ்வாறு இணைக்கப்படும்?
UPI மூலம் EPFO நிதியைப் பெற, உறுப்பினர்கள் அந்த வசதியைச் செயல்படுத்த (activate) வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்கான செயல்முறை இதோ:
- UPI மூலம் பணம் எடுக்கும் வசதி செயல்படுத்தப்பட்டதும், சந்தாதாரர்கள் EPFO இணையதளத்திற்குச் (portal) செல்ல வேண்டும்.
- பின்னர் அவர்கள் தங்கள் சேமிப்புக் கணக்குடன் UPI-ஐ இணைத்துச் செயல்படுத்த வேண்டும்.
- அதன் பிறகு, PF நிதியை UPI மூலம் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
- பணம் மாற்றப்பட்டதும், அருகில் உள்ள ஏடிஎம் (ATM)-க்குச் சென்று உங்கள் டெபிட் கார்டைப் பயன்படுத்தி PF தொகையை எடுத்துக்கொள்ளலாம்.