SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

2027 Gold Prediction: 10 கிராம் தங்கம் விலை இவ்வளவா? இரண்டே மாதங்களில் காத்திருக்கும் ஷாக்!

Gold Price Prediction 2027: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வரும் நிலையில், 2027ஆம் ஆண்டு தங்கம் விலை எவ்வளவு உயரும்? எவ்வளவு இருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் சொல்லும் கருத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம். அடுத்த 2027 தீபாவளி பண்டிகைக்குள் தங்கம் விலை 25 சதவீதம் உயரும் என கணித்திருக்கின்றனர்.

Written By Umabarkavi K
Published: Nov 09, 2026, 17:08 IST | Updated: Nov 09, 2026, 17:20 IST
Image Credit: Image Source: Chatgpt
Join

Gold Price Prediction 2027: சர்வதேசம் மற்றும் இந்திய பொருளாதார சந்தையின் மிகவும் கவனிக்கப்படும் விஷயமாக தங்கத்தின் விலை இருக்கிறது. உலக பொருளாதாரத்தில் தங்கத்தின் விலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினந்தோறும் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை கண்டு வருகிறது.

எட்டாங்கனியாக மாறிய தங்கம்

தங்கத்தில் ஏழை, நடுத்தர மக்களின் பிரதான முதலீடாக இருந்து வருகிறது. ஆனால்,  தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது, ஏழை, நடுத்தர மக்களுக்கு எட்டாங்கனியாக மாறி வருகிறது. 20 முதல் 30 ஆண்டுகளுக்கு பிறகு, தங்கத்தின் விலையை மக்கள் பவுன் கணக்கில் பேசிக் கொண்டிருந்த காலங்கள் மறைந்து, கிராம் கணக்கில் பேச வேண்டிய நிலைக்கு இருப்பது, சாமானியவர்களின் எட்டாத உயரத்திற்கு தங்கம் சென்று இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை, இப்போது திடீரென சரிய ஆரம்பித்துள்ளது. உச்ச விலையில் இருந்து தங்கம் விலை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். தீபவாளி பண்டிகையையொட்டியும், தங்கம் விலை சரிந்தது. இன்றைய நிலவரப்படி,  22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.13,255க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,06,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இனி வரும் காலங்களில் குறிப்பாக, 2027ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பேதே இப்போது மக்களிடையே முக்கிய கேள்வியாக இருக்கிறது.

மேலும் படிக்க: ஆயுள் சான்றிதழ்: நவம்பர் 30-க்குள் இதை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஓய்வூதியம் கிடைக்காது!!

தங்கத்தின் விலை 20 சதவீதம் சரிவு

தங்கத்தின் விலை அதன் உச்சத்தில் இருந்து 2026 மே 29ஆம் தேதி அன்று 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் 1.62 லட்சமாக இருந்தது. அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அதன் விலை 12.8 சதவீதம் (ரூ.20,900) சரிந்து, ரூ.1.42 லட்சமாக குறைந்தது. தொடர்ந்து, நவம்பர் 5 அன்று 10 கிராம் தங்கம் சுமார் ரூ.1.45 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் தங்கம் விலை குறைந்தது நுகர்வோர்கள், நகை வியாபாரிகளுக்கு பயனளித்தது.

தங்கம் விலை சரிக்கு என்ன காரணம்?

கடந்த ஜனவரி 2026ல் சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு தோராயமாக 5,595 டாலர் என்ற வரலாற்றுச் சாதனை உச்சத்தைத் தொட்டது. ஆனால், அதன் பிறகு தங்கத்தின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டது. உள்நாட்டுச் சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை அதன் உச்சமான ரூ.1.80 லட்சத்தில் இருந்து 20 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

வலுவான டாலர், கடன் பத்திரங்கள்: அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றது, அமெரிக்க கடன் பத்திரங்களின் லாபம் அதிகரித்தது, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை தங்கத்தின் விலையில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தின.

கச்சா எண்ணெய் விலை உயர்வு: ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவிய போர் சூழல் காரணமாக, காரணமாகக் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது. இது பணவீக்கம் குறித்த கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியது.

வட்டி விகித உயர்வின் தாக்கம்:  பணவீக்க கவலையால், மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு மாறி, மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற சூழல் உருவானது. தங்கம் எந்தவொரு வட்டி வருமானத்தையும் தராத முதலீடு என்பதால், வட்டி விகிதங்கள் உயரும்போது முதலீட்டாளர்களிடம் தங்கத்தின் மீதான ஈர்ப்பு குறைகிறது.

மேலும் படிக்க: பயிர்க்கடன் யாருக்கெல்லாம் கடன் முழுசா தள்ளுபடியாகும்? தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு Explained

2027-ல் தங்கம் விலை எப்படி இருக்கும்?

இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை தற்போது தோரயமாக ரூ.1.42 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. வரும் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஆக்சிஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் அடுத்த 2027 தீபாவளி பண்டிகைக்குள் தங்கத்தின் விலை 20 முதல் 25 சதவீதம் வரை உயரக் கூடும் என கணித்துள்ளது. 4

இதன் மூலம் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.65 லட்சம் முதல் ரூ.1.85 லட்சம் வரை உயரக் கூடும் என கணித்துள்ளது. முன்பு தங்கம் விலை உயர்ந்தபோது முதலீடு செய்யத் தவறியவர்கள், இந்த விலைச் சரிவைப் பயன்படுத்திப் சிறுகச் சிறுக தங்கத்தைச் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது

ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தகவல்படி, தங்கத்தின் விலை அதன் உச்சத்திலிருந்து 20 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளதால், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும், சர்வதேச அளவில் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை அதிகளவில் வாங்கி வருவது, நீண்டகால நோக்கில் தங்கத்தின் மதிப்பையும் தேவையையும் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

தங்கம் விலை சரிவில் இருக்கும்போது, எப்படி தங்கத்தை வாங்கி சேமிக்கலாம் என்பது குறித்து முன்னணி நிதி நிறுவனமாக ரிலிகேர் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டாளர்களுக்கான முக்கிய விலை வரம்புகளை வெளியிட்டுள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயரக் கூடும் என்பதால், அதன் விலை ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.35 லட்சம் வரம்பிற்குள் வரும்போது சிறுகச் சிறுக வாங்கத் தொடங்கலாம் என தெரவித்துள்ளது. இதனால், 10 கிராம் தங்கம் விலை ரூ.1.50 லட்சத்தை எட்டும்போது, தங்கத்தை விற்று நிறைய பணத்தை சேமிக்கலாம் என கூறுகிறது. வெள்ளியை பொறுத்தவரை, ஒரு கிலோ வெள்ளி ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.63 லட்சம் என்ற விலையில் வாங்கலாம் என தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 66 ஆண்டுகால வீட்டு கடன் விதிகளில் அதிரடி மாற்றம்
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES