SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆதாரில் பெயர் மாற்ற புது ரூல்ஸ்.. இனி இந்த ஆவணங்கள் கட்டாயம் - UIDAI அதிரடி

Aadhaar New Rules: ஆதார் கார்ட்டில் பெயர் திருத்தங்களுக்கு புதிய விதிகளை இந்திய தணித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வெளியிட்டுள்ளது. எனவே, புதிய விதிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Oct 06, 2026, 11:26 AM IST | Updated: Oct 06, 2026, 11:35 AM IST
Join

Aadhaar New Rules: இந்தியர்களின் முக்கியமான ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு சேர்ப்பது முதல் அரசு திட்டங்கள் வரை பல்வேறு சேவைகளுக்கு ஆதார் கார்டு பிரதான ஆவணமாக இருக்கிறது. ஆதார் அட்டையை இந்திய தனித்துவ  அடையாள ஆணையம் நிர்வகித்து வருகிறது. ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என UIDAI கூறி வருகிறது. அவ்வப்போது, ஆதார் விதிகளை UIDAI திருத்தி வருகிறது. இந்த நிலையில், UIDAI ஆதாரில் பெயர் மாற்ற செய்ய புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. ஆதார் கார்ட்டில் பெயர் திருத்தம் செய்வதற்கு சில ஆவணங்களை இனி சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை, பிரமாணப் பத்திரம் மற்றும் அரசிதழ் அறிவிப்பு ஆகியவை UIDAI-ஆல் கடுமையாகச் சரிபார்க்கப்படும்.

1. சிறிய பெயர் மாற்றங்கள் என்ன ஆவணங்கள்?

ஆதார் கார்டில் உள்ள பெயரில் சிறிய மாற்றங்கள் செய்ய விரும்பினால், அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்று அல்லது உறவுமுறை சான்றை சமர்ப்பிக்க வேண்டும். சிறார்களாக இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் உறுதிமொழி பத்திரம், உறவுமுறை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். உதாரணமாக  'Ram' என்பதை 'Rama' என்றும், 'Somya' என்பதை 'Saumya' என்றும் மாற்றுவதற்கு மேற்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க: PNR விதிகளில் மாற்றம்: டிசம்பர் முதல் மாறும் செயல்முறை..... ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல்

2. டேட்டா என்ட்ரியில் தவறு

தரவு உள்ளீட்டுப் பிழை காரணமாக ஆதாரில் பெயர் தவறாக மாற்றப்பட்டிருந்தால், அடையாள சான்று/முகவரிச் சான்றுடன் பி உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சிறார்களுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உறவுமுறை சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

3. திருமணத்திற்கு பின் பெயர் மாற்றினால் என்ன விதிமுறைகள்?

திருமணம் அல்லது விவகாரத்துக்கு பிறகு ஆதார் அட்டையில் பெயரை மாற்ற விரும்பினால் அடையாள சான்றுடன் இணைப்பு டி உறுதிமொழி பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்ற நேரத்தில் திருமண சான்றிதழை சமர்ப்பிக்கலாம். திருமணத்திற்கு  பிறகு தந்தையின் பெயருக்கு பதிலாக பலரும் கணவரின் பெயரை சேர்க்க விரும்புபவர்கள் மேற்கண்ட ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

4, முழுமையான பெயர் மாற்றத்திற்கு என்ன ஆவணங்கள் தேவை?

முழுமையான பெயர் மாற்றத்திற்கு  அரசிதழ் அறிவிப்பு மற்றும் அதற்கான அடையாளச் சான்று (PoI) ஆகியவை கட்டாயமாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கோரப்பட்ட பெயர், முன்னர் பதிவுசெய்யப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட பெயர்களுடன் ஒப்பிடப்படும் என UIDAI கூறியுள்ளது. மேலும், கோரிக்கையைச் செயலாக்குவதற்கு முன்பு, சமர்ப்பிக்கப்பட்ட அடையாள மற்றும் உறவுமுறை ஆவணங்கள், பிரமாணப் பத்திரங்கள் மற்றும் அரசிதழ் அறிவிப்புகளின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்கப்படுகிறது

மேலும் படிக்க: தீபாவளி Jackpot? அரசு ஊழியர்களுக்கு ரூ.21,000 போனஸ்? வெளியான முக்கிய தகவல்!

5.எதற்கெல்லாம் ஆவணங்கள் தேவையில்லை?

ஆதாரில் உள்ள பெயரை திருத்துவதற்கு சிலவற்றுக்கு மட்டும் எந்த ஆவணங்களும் செலுத்த தேவையில்லை. UIDAI-ன் உதாரணப்படி, "RaMesh" என்பதை "Ramesh" என மாற்றுவது போன்றவற்றுக்கு எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில், Captial எழுத்து, Small எழுத்து, பெயர்களில் உள்ள புள்ளிகள், ஆதார் அட்டையில் ஆங்கிலத்தில் பெயர் சரியாகப் பதிவுசெய்யப்பட்டு, அதே சமயம் பிராந்திய மொழியில் பெயர் தவறாக இருப்பதே பிழைக்குக் காரணம் என்றாலும் எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவையில்லை என  UIDAI கூறியுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES