Postpartum Psychosis: தாய்மார்களை அச்சுறுத்தும் மனநோய்! குழந்தைகளை கொல்லும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுமா?
Postpartum Psychosis: அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண், தன் கையால் மூன்று குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்காக வாதிடும் அவருடைய வழக்கறிஞர்கள், அவருக்கு postpartum psychosis இருப்பதாக வாதிடுகின்றனர். அதற்கு அர்த்தம் என்ன? இதோ முழு விவரம்!
அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் எனும் நகரில், வசித்து வருபவர் லிண்ட்ஸே க்ளான்சி. இவர், தன்னுடைய மூன்று குழந்தைகளை 2023ஆம் ஆண்டில் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு குறித்தும், லின்சேவிற்கு இருந்த பிரச்சனை குறித்தும் அனைவரும் பேசி வருகின்றனர்.
லிண்ட்ஸே என்ன செய்தார்?
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று குழந்தைகளை லிண்ட்ஸே கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு தற்போது நடைபெற்று வருவதை தொடர்ந்து, குழந்தை பிறப்பிற்கு பின் ஆன Postpartum psychosis எனும் மனநல பிரச்சனையால் இவர் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவருடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தனர்.
பிரசவத்திற்கு பிந்தைய இந்த மனநோயால் அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாக மாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அடுத்து அரசு தரப்பு அவரை கச்சிதமாக திட்டமிட்டு கொலை செய்தவர் என்று முடிவு கட்டும் வகையில் வாதங்களை முன் வைத்திருக்கிறது. இது மக்கள் மத்தியில் குறிப்பாக பெண்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டதை தொடர்ந்து, பல தாய்மார்கள் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு வெளியே பதாகைகளை ஏந்தி கொண்டு நின்றனர்.
Postpartum psychosis என்றால் என்ன?
கேஸ் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய மனநல மருத்துவராக இருப்பவர் சூசன் ஹேட்டர்ஸ். இவர், “Postpartum psychosis” குறித்த பேசியபோது இதன் அடிப்படை விளக்கத்தை விவரித்தார். அதாவது ஒருவர் எதார்த்தத்தில் இருந்து விலகி இருப்பதுதான் இந்த நிலை என்று குறிப்பிட்டார்.
பிரசவத்திற்கு இன்றைய மனநோய் என்பது பிரசவித்த பிறகு ஒரு சில தாய்மார்கள் அனுபவிக்கும் நிலையாகும். இதில் அவர்களுக்கு பிரம்மை பிடித்தது போல இருப்பது, எரிச்சலுடன் இருப்பது, மனச்சோர்வு, தூக்கமின்மை, குழப்பமான மனங்கள், இல்லாத ஒரு பிம்பம் இருப்பது போல தோன்றுவது போன்ற பலவித அறிகுறிகள் தோன்றும். இதற்குப் பெயர் ஆங்கிலத்தில் postpartum depression. இதனால் தாய்மார்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
Postpartum psychosis என்பது அப்படி அல்ல. இது அரிதாக வரும் மனநோயாகும். குழந்தை பிறப்பிற்கு பிறகு ஒரு வாரம் அல்லது மாதம் கழித்து கூட இந்த நிலை வரலாம். இது நாளாக நாளாக தீவிரம் அடைவது, குறைவது போன்ற நிலையில் இருக்கும்.
இதனை Postpartum depression உடன் ஒப்பிடும் மருத்துவர், பல தாய்மார்கள் இதை உணர்வதாகவும் அப்படி இந்த நிலையில் இருப்பவருக்கு எதிலும் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் பசியின்மை, சோர்வு, மகிழ்ச்சி உண்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுவார்கள் எனக்கு குறிப்பிட்டுள்ளார்.
லிண்ட்ஸே க்ளான்சி குறித்து பேசும் மருத்துவர் அவருடைய அறிகுறிகளாக மாயத்தோற்றம் தெரிவது போல உணர்ந்தது (hallucination) குறித்து நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இது மூன்றாவது குழந்தை பிறப்பிற்கு பிறகு நிகழ்ந்துள்ளது. இவருடைய முன்னாள் கணவர் பேட்ரிக், லிண்ட்ஸே க்ளான்சி குழந்தை பிறப்பிற்கு பின் மனச்சோர்வுடன் இருந்தார் போகப் போக அது இன்னும் மோசம் அடைந்தது என்பதை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். குழந்தைகள் இருப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருப்பர்?
இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் எந்த நேரமும் ஏதோ ஒரு பிரச்சனை இருப்பதோடு மட்டும் தெரிய மாட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர், அந்த பாதிப்பில் இருக்கும் போது அவரது மனம் எவ்வளவு ஒழுங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து இது பெரும்பாலும் அமையும் என்று தெரிவித்துள்ளார். இது schizophrenia போன்ற எந்த ஒரு மனநோயிலும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு ஒருவருக்கு அந்த மாய பிம்பங்கள் தோன்றினாலும் வெளியில் சாதாரணமாக நடந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சனையா பாதிக்கப்பட்டவர்கள் பல நேரங்களில் ஒழுங்கற்ற நிலையிலும் யோசிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
ஆய்வுகள் சொல்வது என்ன?
மனநல மருத்துவர் ஆர்சோ, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் லிண்ட்ஸே குறித்தும், அவர் செய்த சம்பவங்கள் குறித்தும் குறிப்பிட்ட அவர், இவ்வளவு கொடூரமான செயலை செய்த ஒரு பெண்ணிற்காக, பல்லாயிரக்கணக்கான தாய்மர்கள் உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார். இதற்கு காரணம், அந்த தாய்மார்களுக்கு லிண்ட்ஸேயின் மனநல நோய் குறித்து புரிந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆய்வுகள் என்ன சொல்கிறது என்பது குறித்தும் அவர் பேசினார். அப்போது, ஒரு சமீபத்திய ஆய்வில், 763 தாய்மார்களில், 95.8% பேர் தங்களுடைய குழந்தைகளுக்கு ஆபத்து நேருமோ என்கிற தேவையற்ற எண்ணங்கள் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளனர். அதில், 53.9% பேர், தன்னால் தன் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்கிற எண்ணத்தை கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அர்த்தம், அவர்கள் அனைவரும் ஆபத்தானவர்கள் என்பதல்ல என கூறிய அவர், Intrusive Thought எனக்கூறப்படும் ’ஊடுருவும் எண்ணம்’ வரும் போது பெரும்பாலான தாய்மார்களின் ரியாக்ஷன், பதற்றம் மற்றும் பயமாக இருக்கும். ஆனால், லிண்ட்ஸேவின் வழக்கில் இந்த அணுகுமுறை கிடையாது. இது வித்தியாசமானது என கூறும் அவர், அவருக்கு வந்திருப்பது psychosis என்றும், அந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு நிஜம் எது பொய் எது என்றே தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
லிண்ட்ஸேவின் வழக்கு, நீண்ட காலமாக இந்த சமுதாயம் பேச வேண்டிய ஒரு விவாதத்தை தூண்டியிருப்பதாகவும், பல தாய்மார்கள் தங்களுக்குள் மிகுந்த பயமுறுத்தும் எண்ணங்களை வைத்துக்கொண்டு அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்தார். இதை இப்படியே பேசாமல் விட்டோம் என்றால், அவை காணாமல் போகாது என்றும், நாளடைவில் இது போன்ற பாதிப்பு உள்ளவர்கள், வெளியில் வந்து இது குறித்து பேசவே பயப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.