SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

5.3 வினாடியில் 800 kmph வேகம்... அதிவேகத்தில் மிதக்கும் ரயில் - மிரட்டும் சீனா

China Maglev Train Speed Record: சீனாவில் நடந்த சோதனை ஓட்டத்தில், Maglev காந்த மிதப்பு ரயில் 5.3 வினாடிகளில் மணிக்கு 800 கி.மீ., வேகத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதன் தொழில்நுட்பம், பயன்பாடு மற்றும் பிற விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.

Written By Sudharsan G
Published: Aug 13, 2026, 07:19 AM IST | Updated: Aug 13, 2026, 08:43 AM IST
Join

China Maglev Train Speed Record: சீனாவில் காந்த மிதப்பு ரயில் (Magneti Levitation - Maglev)அதன் சோதனை ஓட்டத்தில், வெற்றிகரமாக அதிவேகமாக இயக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

குறுகிய தூர முடுக்க (short distance accleration) சாதனையை கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்த காந்த மிதப்பு ரயில் மூன்றாவது முறையாக முறியடித்துள்ளது. இந்த காந்த மிதப்பு ரயில் அதன் நின்ற நிலையில் இருந்து வெறும் 5.3 வினாடிகளில் மணிக்கு 800 கி.மீ., வேகத்தை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பயணிகளுக்கு அல்ல...

1.1 டன் எடை கொண்ட காந்த ஈர்ப்பு ரயில், சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள டோங்ஹு ஆயவகத்தில் 1 கி.மீ., நீளமுள்ள தண்டவாளத்தில் வெற்றிகரமாக சோதனையை நிறைவு செய்தது என The Independent பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த வாகனம் வழக்கமான பயணிகள் ரயில்கள் அல்ல, குறிப்பாக, சோதனை வாகனம் மக்களை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.

Maglev ரயில் என்றால் என்ன?

Maglev என்றழைக்கப்படும் இந்த காந்த மிதப்பு ரயில்கள், வழக்கமான ரயில் அமைப்புகளில் இருக்கும் உராய்வின் பெரும்பகுதியை நீக்குகிறது. இந்த ரயில் தண்டவாளத்தை உரசாமல் காற்றில் மிதந்து செல்லும். இவ்வாறு அந்த ரயில் தண்டவாளத்தை தொடாமல் மிதந்து செல்வதற்கு காந்த விசைகளை பயன்படுத்துகின்றன.

சுருள்கள் (Coils) தண்டவாளம் நெடுகிலும் காந்த புலங்களை உருவாக்கும். காந்த புலங்கள் இந்த வாகனத்தை முன்னோக்கிச் செலுத்துகின்றன. சமீபத்திய சோதனை ஓட்டத்தில், இந்த ரயில் வெறும் 5.3 வினாடிகளில் மணிக்கு 800 கி.மீ., வேகத்தை எட்டியிருக்கிறது. பின்னர் சுமார் 200 மீட்டர் தூரத்திலேயே கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நிறுத்தப்பட்டது.

ரயிலின் நிறுத்தமும் வெற்றி...

எந்தளவிற்கு அதிவேகமாக இயக்கப்படுகிறதோ, அதை பாதுகாப்பாக நிறுத்துவதும் முக்கியமாகும். அந்த வகையில், வாகனத்தை வேகத்தை பாதுகாப்பான முறையில் குறைப்பதற்கு மேம்பட்ட அமைப்புகள் தேவைப்படுகின்றன. இதுவே இந்த வெற்றிகரமான நிறுத்தச் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முந்தைய சாதனைகள்

முதன்முதலில், இந்த Maglev சோதனை ரயில் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெரும் சாதனையை படைத்தது, 7 வினாடிகளில் மணிக்கு 650 கி.மீ., வேகத்தை எட்டியது. தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் அதன் வேகத்தை மணிக்கு சுமார் 700 கி.மீ., ஆகவும், பின்னர் மணிக்கு 798 கி.மீ, ஆகவும் அதிகரித்தோடு, அவ்வளவு வேகத்தை அடையத் தேவைப்படும் நேரத்தையும் குறைத்தனர்.

சோதிக்கப்படும் தொழில்நுட்பங்கள்

இந்த ரயிலின் ஒவ்வொரு சோதனை ஓட்டத்தின்போது, சோதனைக்குட்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து குறித்து சீன அரசின் ஒளிபரப்பு நிறுவனமான CCTV தெரிவித்துள்ளது. அவை:

வணிக ரீதியாக இயக்கப்பட்டு வரும் தற்போதைய Maglev ரயில்களை விட, இந்த சோதனை Maglev ரயில் அதிவேகத்தை கொண்டுள்ளது. சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் இயக்கப்பட்டு வரும் வணிக ரீதியான Maglev ரயில் மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகின்றன. சீனாவின் அதிவேக வணிக ரீதியான ரயில் என்றால் 350 கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.

சோதனையில் உள்ள மற்றொரு வாகனம்...

இவற்றை போலவே, சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அதிவேக காந்த மிதப்பு தொழில்நுட்பத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் சோதனையில் ஒரு வாகனம் வெறும் இரண்டே வினாடிகளில் மணிக்கு 697 கி.மீ, வேகத்திற்கு முடுக்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு அதிவேகத்தில் சோதனை ரயில்கள் இயக்கப்பட்டாலும் இவை பயணிகளின் பயன்பாட்டுக்கு இன்னும் ரெடியாகவில்லை.

இந்த தொழில்நுட்பங்கள் எதற்கு...?

காந்த மிதப்பு ரயில்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை கொண்டு ராக்கெட், போர் விமானங்கள் போன்ற அதிவேக ஏவுதல் அமைப்புகளுக்கு இறுதியில் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருவதாகவும் CGTN தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் குறைந்த அழுத்தத்தில் அல்லது வெற்றிடக் குழாய்கள் வழியாகப் பயணிக்கக் கூடிய ரயில்களுக்காகவும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES