SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட..28 வயது இன்ஸ்டா பிரபலம் இறப்பு!

Michiel Vandeweerst எனும் 28 வயது இன்ஃப்ளூவன்ஸர், பல வருடங்களாக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்திருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Written By Yuvashree M
Published: Aug 14, 2026, 04:00 PM IST | Updated: Aug 14, 2026, 04:07 PM IST
Join

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்!

Michiel Vandeweerestக்கு Progeria எனும் அரிய வகை நோய் இருந்திருக்கிறது. இந்த நோய், உடலை வழக்கத்தை விட மிக வேகமாக முதுமையடையச் செய்து, ஒருவரின் ஆயுளைக் குறைக்கக்கூடும் தன்மை உடையது. வான்டெவெர்ட்டுக்கு இளம் வயதிலேயே இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் 13 வயதைத் தாண்டி உயிர் வாழமாட்டார் என்று மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் எப்போதோ தெரிவித்து விட்டனர். இருப்பினும், வான்டெவெர்ட் எதிர்பார்த்ததை விட மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்தார்.

இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூவன்ஸராக இருந்த அவர்,  தனது வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசவும், இந்தக் கோளாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தனக்கிருந்த ஃபாலோவர்ஸ் மற்றும் சமூக வலைதளத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.

இவர், பெல்ஜியன் சாக்கர் குழுவின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்தார். இவர் இறந்ததை அடுத்து, அந்த குழு இவரை பற்றி வெளியிட்டுள்ள புகைப்படத்தை தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

சகோதரிக்கும் அதே நிலை..!

Michielக்கு மட்டுமல்ல, இவருடைய தங்கை ஒருவர் இருக்கிறார். அவருக்கும் அதே கண்டீஷன். இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் அவருடைய குடும்பத்தினர், ஆழ்ந்த வருத்தத்துடன் அவருக்கு பிரியாவிடை அளிப்பதாகவும், அவர் வாழ்க்கையை உண்மையாகவே நேசித்தார் என்றும் கூறியிருக்கின்றனர். மேலும், அவரது தைரியமும் நேர்மறை எண்ணங்களும் பலருக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருந்தன என்றும் கூறியுள்ளனர்.

Michil, இன்ஸ்டாகிராம், யூடியூப், ட்விச் போன்ற தளங்களில் ஆக்டிவாக இருந்தவர்களுள் ஒருவர். இவர், 90,000க்கும் மேல் இணையத்தில் ஃபாலோவர்ஸ்களை வைத்துள்ளார். 15 வயதில் கண்டண்ட் கிரியேஷனை ஆரம்பித்த இவர், அவ்வப்போது தன்னுடைய சகோதரியுடன் சேர்ந்து கண்டண்ட்களை போடுவார். இவர்களின் வாழ்க்கையை வைத்து Be Alive : Amber And Michiel எனும் திரைப்படமும் வெளியாகி இருக்கிறது.

நெட்டிசன்கள் வேதனை..

இவரது இறப்பு குறித்து, நெட்டிசன்கள் பலரும் சோகமாக பதிவிட்டு வருகின்றனர். “நம் அனைவருக்கும் வாழ்க்கை ஒரு பரிசு என்பதை காட்டியவர் இவர். நிம்மதியாக பறக்கட்டும்” என்று தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது அன்புக்குரியவர்களுக்கு பலம் கிடைக்கட்டும் என கூறி வருகின்றனர். இன்னும் சிலர், அவரை எப்போதும் மறக்க முடியாது என கூறி வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES