10ம் வகுப்பு படித்தவரா? மத்திய அரசின் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
Chennai ICF Recruitment: சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 1,010 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு 10,12, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai ICF Recruitment: சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள், அதிவேக ரயில்கள், மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.
ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தற்போது காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, இந்த தொழிற்சாலையில் 1,010 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிஎஃப் காலிப் பணியிடங்கள்
ஐசிஎஃப் தொழிற்சாலையில் கார்பெண்டர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர், எம்எல்டி ரேடியோலாஜி, எம்எல்டி பதோலஜி, கார்பெண்டர், எல்க்ட்ரீசியன், வெல்டர், பிஏஎஸ்எஸ்ஏ உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,010 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
கல்வித்தகுதி, சம்பளம்
சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் 1,010 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 10,12, ஐடிஐ என இதில் ஏதேனும் ஒன்றை படித்து முடித்திருக்க வேண்டும்.
எம்எல்டி பணிக்கு 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியல், பயாலஜி பிரிவை எடுத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணிக்கான பயிற்சிக்காலத்தை பொறுத்தவரை புதிதாக பணியில் சேருபவர்களுக்கு இரண்டு வருடமும், ஐடிஐ படித்தவர்கள் ஒரு வருடமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரெண்டீஸ் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் ஓராண்டு ஒப்பந்த கால அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 10ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.8,200 ஊதியம் வழங்கப்படும். 12ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட பணியிடங்களுக்கு ரூ.9,600 ஊதியமாக வழங்கப்படும். ஐடிஐ பணியிடங்களுக்கு ரூ.9,600 வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் cள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும், அரசு விதிகளின்படி, வயது வரம்பிலும் தளர்வு அளிக்கப்படுகிறது.
அதன்படி, ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. இந்த பணிக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் உள்ள அப்ரண்டீஸ் பணிக்கு icf.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்டி, எஸ்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 7ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, 10,12, ஐடிஐ படித்தவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பிக்க வேண்டும்.