SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஈரோடு: மாதம் ரூ.60,000 சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழக அரசின் அறிவிப்பு

Erode government jobs : ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Written By Umabarkavi K
Published: Aug 13, 2026, 08:34 PM IST | Updated: Aug 13, 2026, 08:43 PM IST
Join

Erode government jobs : ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கி வரும் பல்வேறு திட்டங்களின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை மாவட்ட நலவாழ்வு சங்கம் வெளியிட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள் மற்றும் கல்வித்தகுதிகள்

இவ்வறிவிப்பின்படி, சித்த மருத்துவர் (PG), ஆயுர்வேத மருத்துவர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர் மற்றும் சித்த மருத்துவர் போன்ற உயர்பதவிகளுக்கு BAMS, BNYS, MD (Siddha/Ayurveda) போன்ற மருத்துவப் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கு மாதச் சம்பளமாக ரூ. 40,000 முதல் ரூ. 60,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர் (Special Educator - ரூ.17,000), RMNCH ஆலோசகர் (ரூ.18,000), யோகா நிபுணர் (ரூ.28,000) மற்றும் சித்த மருந்தாளுனர் (Siddha Pharmacist - ரூ.20,000) ஆகிய பணியிடங்களுக்குத் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு (Diploma/Degree) முடித்தவர்கள் தகுதியானவர்கள் ஆவர்.

மேலும், கணினி பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சுத் திறமையுடன் 1 ஆண்டு அனுபவம் கொண்டவர்களுக்கு டேட்டா அசிஸ்டெண்ட் (Data Assistant - ரூ.15,000) பணியிடமும், +2 உயிரியல் பாடத்துடன் DMLT முடித்தவர்களுக்கு லேப் டெக்னீசியன் (Laboratory Technician Gr-3 - ரூ.13,000) பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் அட்டெண்டர் (Attender - ரூ.10,000) பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

இப்பணியிடங்கள் அனைத்தும் முற்றிலும் ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையிலானவை. எந்தவொரு காலக்கட்டத்திலும் இப்பதவிகள் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. தேவையைப் பொறுத்து காலியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவைகள்:

விண்ணப்பப் படிவங்களை ஈரோடு திண்டலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது https://erode.nic.in என்ற மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிறந்த நாள் சான்று, கல்வி மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள், கவுன்சில் பதிவுச் சான்றிதழ், இருப்பிடச் சான்று (ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை/ரேஷன் கார்டு), சாதிச் சான்றிதழ் மற்றும் அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களில் சுய கையொப்பமிட்டு (Self Attested) இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவுத் தபால் (Speed Post) மூலமாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், திண்டல், ஈரோடு மாவட்டம் - 638012. (தொலைபேசி எண்: 0424-2431020). முழுமையற்ற மற்றும் காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES