SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு! டிகிரி இருந்தா போதும்..அப்ளை செய்வது எப்படி?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, 250 வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Aug 19, 2026, 02:10 PM IST | Updated: Aug 19, 2026, 02:19 PM IST
Join

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றாக இருக்கிறது. இந்த வங்கியில், உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதுமாக மொத்தம் 250 பணியிடங்கள் இதன்படி நிரப்பப்பட இருக்கின்றன. இந்தியா முழுவதும் இருக்கும் 250 பணியிடங்கள் இதில் நிரப்பப்பட இருக்கின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 100 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 250ஆக இருக்கிறது.

வயது தகுதி : 01.08.2026 அன்று, 20 முதல் 30 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வு இருகிரது.

சம்பளம் எவ்வளவு?

இதற்கான சம்பளம், ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை இருக்கும்.

தேர்வு செய்யப்படும் முறை எப்படி?

இந்த பணியிடங்களுக்கான தேர்வு, கணினி வழியே நடத்தப்படும். மேலும், வட்டார மொழித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில்தான், இதற்கான தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில், வட்டார மொழித்தேர்வு தகுதி தேர்வு மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினி வழி நடைபெறும் தேர்வில், திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது/வங்கி சார்ந்த 140 கேள்விகள் 200 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு சுமார் 3 மணி நேரம் ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை இதோ:

விண்ணப்பிக்க கடைசி தேதி எது?

உங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க, 24.08.2026 கடைசி தேதியாகும்.

பணியிட விவரங்கள்:

250 பணியிடங்களில், 100 பணியிடங்கள் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவில் 50 பணியிடங்களும், மகாராஷ்டிராவில் 50 பணியிடங்களும், குஜராத்தில் 50 பணியிடங்கலும் நிரப்பப்பட இருக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் வழங்கப்படும் பணியிடங்களில் 15 எஸ்.சி பிரிவினருக்கும், 6 பணியிடங்கள் எஸ்.டி பணியிடத்திற்கும், 33 பணியிடங்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 9 பணியிடங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கும், 37 பணியிடங்கள் பொது பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தகுதிகள் என்ன?

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் டிகிரி படித்தவராக இருக்க வேண்டும்.

கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

ZEENEWS TRENDING STORIES