8ஆம் வகுப்பு படித்தவரா? மாதம் ரூ.57,000 வரை சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
Kanyakumari Job: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சசி அலுகீல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 8ம் வகுப்பு படித்தவர்கள விண்ணப்பிக்கலாம்.
Kanyakumari Job: கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத் தரப்பில் காலியாக உள்ள 1 அலுவலக உதவியாளர் பணியிடத்தினை பூர்த் செய்யும்/ நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விரவேற்கப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுகில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.7.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். 01.07.2026 அன்று அதிகபட்ச வயது வரம்பு எஸ்சி பிரிவினருக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதியை பொறுத்தவரை, 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத சம்பளத்தை பொறுத்தவரை, அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ.15700 முதல் ரூ.57,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக அரசு வேலைவாய்ப்பு: பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்
நிபந்தனைகள்
- விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
- இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.
- விண்ணப்பபடிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
- தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி), கன்னியாகுமரி மாவட்டம் 629 001 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 06.11.2026 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலும், மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கான kanniyakumari.nic.in என்ற இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ரூ.50,000 சம்பளம், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள்
விண்ணப்ப படிவத்தில் பெயர், பாலினம், தந்தை/கணவர் பெயர், பிறந்த தேதி, கல்வித்தகுதி, முகவரி, தொலைபேசி, வகுப்பு போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் உண்மை என உறுதியளிக்கிறேன் என்றும் தேர்விற்கு முன்போ அல்லது பிறகோ இவ்விவரங்கள் தவறு என அறியவரும் பட்சத்தில் என் மீது தேர்வுக்குழு எடுக்கும் நடவடிக்கைக்கு உட்படுகிறேன் என்பதற்கு விண்ணப்பதாரர்கள் கையெழுத்திட வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிக்கான நேர்காணலின்போது கல்வித்தகுதி உள்ளிட்ட சான்றிதழ் மற்றும் ஆவண நகல்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் என்ன பணி காலியாக உள்ளது?
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1 அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2. அலுவலக உதவியாளர் பணிக்கு கல்வித்தகுதி என்ன?
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். 01.07.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
3. அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து, நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 06.11.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க: தமிழக அரசு வேலைவாய்ப்பு: பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்