8ம் படித்தவர்களுக்கு தமிழக அரசின் வேலை.. மாதம் ரூ.25,000 சம்பளம்.. மதுரை மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு!
Madurai Government Job: மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிகளுக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
Madurai Government Job: தமிழக அரசு மாவட்ட வாரியாக காலியாக பணியிடங்களை நிரப்பி வரும் நிலையில், மதுரை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த விவரத்தை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு
மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் உருவாக்கப்பட உள்ள கீழ் காணும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்தார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர், இளநிலைய உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 3 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
1. உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர் (Assistant Cum Bench Clerk)
மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளர் மற்றும் அமர்வு எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் அறிவியல், கலை,வணிகம், பொறியியல், மருத்துவம் அல்லது வேறு ஏதேனும் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
10.2.3 அல்லது 11.1.3 கல்வி முறையில் படித்திருக்க வேண்டும். உதவியாளர் பணியிடத்திற்கான நேரடி நியமனத்தில், தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் நடத்தப்படும் Computer on Office Automation தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு ஒன்றியத்தில் பல்கலைக்கழகத்தால் அல்லது இந்திய அங்கீகரிக்கப்பட்ட வழங்கப்படும் கணினி தொடர்பான டிப்ளமோ பட்டப்படிப்பு தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 42 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு ரூ.25,000 மாத தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படும்.
2. இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர் (Junior Assistant Cum Record Clerk)
மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் பதிவேடு எழுத்தர் பணக்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு 42 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.20,000 வழங்கப்படும். இப்பணியிடம் மாத தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அலுவலக உதவியாளர் (Office Assistant)
மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் செயல்பட்டு வரும் அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி அல்து அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு 42 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.13,000 சம்பளம் வழங்கப்படும். இப்பணியிடங்கள் மாத தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படும்.
மேலும் படிக்க: 8ஆம் வகுப்பு படித்தவரா? மாதம் ரூ.57,000 வரை சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கான தேர்வு, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாவட்டத் தேர்வுக் குழு மூலம், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள், வயது வரம்பு, அனுபவம். ஆவண சரிபார்ப்பு மற்றும் பிற பொதுத் தகுதி நிபந்தனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மேலும், பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு முன் தேவையான காவல்துறை பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, உரிய முறையில் பூர்த்தி செய்து. கல்வி மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, 30.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிபந்தனைகள்
மேற்கண்ட பணியிடம் முற்றிலும் தற்காலிகமானதாகும். மேற்கண்ட பணியிடத்திற்கு பணியமர்த்தப்படும் பணியாளர் நிர்வாகக் காரணங்களுக்காக எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதற்கு உட்பட்டவராக உள்ளார். மேற்கண்ட பணியிடத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அப்பணிக்கான எவ்வித உரிமை கோரலையும் பணியாளர் கொண்டிருக்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்களோ அல்லது முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாமலோ அல்லது முறையாக ஆவணங்கள் இணைக்கப்படாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்
பெரும் திட்ட அலுவலக வளாகம் 3ம் தளம் மதுரை-625020.
மேலும் படிக்க: BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ரூ.50,000 சம்பளம், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?