• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /"2 ஆண்டில் பணம் இரட்டிப்பு": தமிழ்நாட்டில் பரவும் கவர்ச்சி விளம்பரங்கள் – அரசு எச்சரிக்கை

"2 ஆண்டில் பணம் இரட்டிப்பு": தமிழ்நாட்டில் பரவும் கவர்ச்சி விளம்பரங்கள் – அரசு எச்சரிக்கை

2 ஆண்டில் பணம் இரட்டிப்பு என்ற விளம்பரங்களை கொடுக்கும் போலி சீட்டு, நிதி நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 19, 2026, 01:36 PM IST|Updated: Oct 19, 2026, 01:37 PM IST
joinshare
"2 ஆண்டில் பணம் இரட்டிப்பு": தமிழ்நாட்டில் பரவும் கவர்ச்சி விளம்பரங்கள் – அரசு எச்சரிக்கை
Image Credit: Tamil Nadu Govt Warning

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வங்கியில் வேலை! ரூ.5 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்..

வங்கியில் வேலை! ரூ.5 லட்சம் வரை சம்பளம்! விண்ணப்பிப்பது எப்படி? இதோ விவரம்..

2

டிசம்பரில் சென்னைக்கு பெரிய ஆபத்து? இந்த பகுதிக்கு எச்சரிக்கை! நிபுணர்கள் வார்னிங்

3

தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு குட் நியூஸ்! CM விஜய் அறிவித்த புதிய திட்டங்கள்.. என்னென்ன?

4

"2 ஆண்டில் பணம் இரட்டிப்பு": தமிழ்நாட்டில் பரவும் கவர்ச்சி விளம்பரங்கள் – அரசு எச்சரிக்கை

5

ஜனவரி மாத திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு! ஸ்ரீவாரி தேவஸ்தானம் தகவல்..எப்படி புக் செய்வது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தருமபுரி மாவட்டத்தில் போலி சீட்டு நிறுவனங்கள், அனுமதியற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் அதிக வட்டி தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மோசடி:

இரண்டு ஆண்டுகளில் பணம் இரட்டிப்பு, மாதம் தவறாமல் உறுதியான வருமானம், ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் லாபம்  போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் தருமபுரி, நல்லம்பள்ளி, பெண்ணாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சில போலி சீட்டு மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. துண்டுப் பிரசுரங்கள், அச்சிட்ட சுவரொட்டிகள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக இந்த மோசடி விளம்பரங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பல ஆண்டுகள் உழைத்துச் சேர்த்த சேமிப்பை இதுபோன்ற கவர்ச்சி விளம்பரங்களை நம்பி இழந்துவிட வேண்டாம் என்றும், அனுமதியற்ற நிறுவனங்களில் முதலீடு செய்தால் பணத்தை மீட்பது மிகக் கடினம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி நிறுவனங்களை அடையாளம் காண்பது எப்படி?

வங்கி வட்டியை விட பல மடங்கு அதிக வருமானம் தருவதாகக் கூறுதல், "இன்றே சேருங்கள், இல்லையெனில் வாய்ப்பு போய்விடும்" என அவசரப்படுத்துதல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தால் கமிஷன் தரும் சங்கிலித் தொடர் (Chain link) திட்டங்கள் போன்றவை மோசடியின் முக்கிய அறிகுறிகளாகும். மேலும், நிறுவனத்தின் முறையான பதிவு ஆவணங்களைக் காட்ட மறுப்பது, முறையான ரசீது இன்றி ரொக்கமாகப் பணம் கேட்பது போன்ற நிறுவனங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற நிறுவனங்களைச் சரிபார்ப்பது அவசியம்:

முதலீடு செய்யும் முன் அந்நிறுவனம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதா, முறையான உரிமம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். முகவரி மற்றும் உரிய அனுமதியில்லாத ஆன்லைன் கடன் செயலிகள் மற்றும் முதலீட்டுச் செயலிகள் மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

அரசு அனுமதி பெற்ற மற்றும் ரிசர்வ் வங்கி (RBI) அல்லது பதிவுத் துறை மூலம் உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் குறித்த விவரங்களை https://www.rbi.org.in/commonman/english/scripts/NBFCs.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

பொதுமக்கள் போலி நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை மட்டுமே நம்பி முதலீடு செய்யாமல், மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu