மயிலாடுதுறை: மாதம் ரூ.50,000 சம்பளம்! தமிழக அரசின் வேலை.. எப்படி அப்ளை பண்ணலாம்?
Mayiladuthurai Government Jobs: மயிலாடுதுறையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தூய்மை பாரத இயக்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிககு மாதம் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது.
Mayiladuthurai Government Jobs: தமிழக அரசு மாவட்ட வாரியாக பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மயிலாடுதுறையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தூய்மை பாரத இயக்கத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, இந்த பணிக்கான சம்பளம், கல்வித்தகுதி போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மயிலாடுதுறையில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமையை செயல்படுத்துவதற்கு மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தை வெளிசந்தை (Outsourcing) முறையில் மகமை மூலம் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.50,000-ல் நிரப்பிட உள்ளது.
மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் தேர்வுக்கான தகுதிகள் பதவியின் பெயர்: மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் (District Banking Co-ordinator), தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மண்டல மற்றும் கிராமப்புற வங்கியில் ஏற்கனவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்கள் (தன் விருப்ப ஓய்வில் சென்றவர்கள் /பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்), வயது 60 முதல் 65 வயதிற்குள் இருப்பவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மேற்காணும் தகுதி உடையோர் விண்ணப்பங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்), 4 வது தளம், மாவட்ட ஆட்சியரகம், மயிலாடுதுறை-609305 என்ற முகவரிக்கு 25.08.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ என மாவட்ட சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ரூ.35000 சம்பளத்தில் வேலை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டப் பணிகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்து செயல்படுத்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் வெளிமுமை முறையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.
இந்த பணிக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மாதம் ரூ.35,000 சம்பளமும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு ரூ.25,000 சம்பளமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு முதுகலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். சமூகப்பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
மேலும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.25000 வழங்கப்படும். இப்பணியிடம் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மாவட்ட இணையதளத்தில் பெற்றுக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை மேலாளர், மாவட்ட மக்கள் கற்றல் மையம், 4ஆம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மயிலாடுதுறை மாவட்டம் எ ன்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.