• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /புதுக்கோட்டை வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

புதுக்கோட்டை வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

Pudukottai government jobs : புதுக்கோட்டை மாவட்ட சிறையில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன என்பது உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Oct 05, 2026, 05:28 PM IST|Updated: Oct 05, 2026, 05:32 PM IST
joinshare
புதுக்கோட்டை வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்
Image Credit: Pudukottai government jobs

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
யூடியூபர் மதுமிதா மீது செயின் திருட்டு குற்றச்சாட்டு! 118 பவுன் திருடப்பட்ட வழக்கில் திருப்பம்..

யூடியூபர் மதுமிதா மீது செயின் திருட்டு குற்றச்சாட்டு! 118 பவுன் திருடப்பட்ட வழக்கில் திருப்பம்..

2

Explained : Emergency Fund சேர்க்க சொல்லும் முதலீட்டாளர்! இதன் அவசியம் என்ன? Save செய்வது எப்படி?

3

புதுக்கோட்டை வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

4

Explained: வெளி மாநிலத்தவர்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுமா? முழு விவரம்

5

தாட்கோ இலவச பயிற்சி! லட்சங்களில் சம்பாதிக்கலாம் - எப்படி விண்ணப்பிப்பது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Pudukottai government jobs : புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா வெளியிட்டுள்ளார். சமையலர், தூய்மைப் பணியாளர் மற்றும் சமூக இயல் வல்லுநர் ஆகிய பணிகளுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிட விவரங்கள் மற்றும் தகுதிகள்

1. சமூக இயல் வல்லுநர்:

காலியிடம்: 1

சம்பளம் (மதிப்பூதியம்): மாதம் ரூ.15,000/-

கல்வித் தகுதி: Social Work / Social Service / Social Science / Criminology / Sociology ஆகிய பாடப்பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (01.07.2026 நிலவரப்படி):

OC - 30 வயதுக்குள்

BC / MBC - 32 வயதுக்குள்

SC / ST / SCA - 35 வயதுக்குள்

2. சமையலர்:

காலியிடங்கள்: 2

சம்பளம்: ரூ.15,900/- மற்றும் படிகள்

கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் சமையல் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: BCM பிரிவினருக்கு 32 வயது வரையிலும், SC பிரிவினருக்கு 35 வயது வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. தூய்மைப் பணியாளர்:

காலியிடங்கள்: 9

சம்பளம்: ரூ.15,700/- மற்றும் படிகள்

கல்வித் தகுதி: தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.

வயது வரம்பு: BC / MBC / GT பிரிவினருக்கு 32 வயது வரையிலும், SC பிரிவினருக்கு 35 வயது வரையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை 

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான சான்றிதழ் நகல்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

கூடுதல் கண்காணிப்பாளர் (பொ), மாவட்ட சிறை, புதுக்கோட்டை – 622 001. தொடர்பு எண்: 04322-222220

விண்ணப்பிக்க கடைசி நாட்கள்

சமையலர் மற்றும் தூய்மைப் பணியாளர்: 10.10.2026 (மாலை 5.45 மணி வரை). சமூக இயல் வல்லுநர் பணி: 12.10.2026 (மாலை 5.45 மணி வரை

குறிப்பிட்ட கடைசி தேதி மற்றும் நேரத்திற்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், ஆர்வமுள்ள நபர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu