SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தீபாவளிக்கு ஸ்வீட் தயாரிக்க தமிழ்நாடு அரசே கொடுக்கும் பயிற்சி - முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Govt Free Training : தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களுக்கு தேவையான ஸ்வீட் உள்ளிட்ட இனிப்பு வகைகளை தயாரித்து, விற்பனை செய்வதற்கான பயிற்சியை தமிழ்நாடு அரசே கொடுக்க உள்ளது. முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 19, 2026, 07:55 AM IST | Updated: Oct 19, 2026, 07:59 AM IST
Join

Tamil Nadu Govt Free Training  : தீபாவளி மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, உணவு மற்றும் மசாலாப் பொருட்கள் தயாரிப்புத் துறையில் தொழில் தொடங்க விரும்புவோருக்குத் தமிழ்நாடு அரசு சிறப்பான வாய்ப்பை அறிவித்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து 3 நாட்கள் நேரடிப் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.  

எப்போது? எங்கு நடைபெறுகிறது?

இப்பயிற்சி வரும் அக்டோபர் 28 முதல் 30 வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் (EDII அலுவலகச் சாலை) இப்பயிற்சி நேரடியாக வழங்கப்படவுள்ளது.  

என்னென்ன பயிற்சிகள் கற்றுத்தரப்படும்?

பயிற்சியில் மொத்தம் 38 வகையான மசாலாப் பொருட்களான ரசம், சாம்பார், பிரியாணி, சிக்கன், மீன் மசாலா உள்ளிட்டவை மற்றும் 9 வகையான இனிப்பு, ரெடி மிக்ஸ் தயாரிப்புகள் பான்கேக் மிக்ஸ், சிறுதானிய இனிப்பு மிக்ஸ், சாக்லேட் மால்ட் பவுடர், ராகி லட்டு, மல்டிகிரைன் பால் மிக்ஸ், மூலிகை ஹெல்த் மிக்ஸ் உள்ளிட்டவை தயாரிப்பது குறித்துக் கற்றுத்தரப்படும்.  

மூலப்பொருட்களைத் தேர்வு செய்வது முதல் தயாரிப்பு முறை, தரம் மற்றும் தூய்மைப் பராமரிப்பு, FSSAI உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள், பேக்கிங், பிராண்டிங், விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்துதல் வரை முழுமையான செயல்முறை விளக்கம் அளிக்கப்படும். மேலும், ஏற்றுமதி-இறக்குமதி நடைமுறைகள் மற்றும் தொழில் உரிமம் பெறுவது குறித்த வழிகாட்டல்களும் வழங்கப்படும்.  

அரசு சான்றிதழ், மானிய உதவி:

பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்குத் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் மத்திய, மாநில அரசுகளின் தொழில் தொடங்குவதற்கான மானியத் திட்டங்கள் மற்றும் நிதியுதவிகள் குறித்த அரிய தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.  

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் அனைவரும் இதில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள். வெளியூரில் இருந்து வருபவர்களுக்குத் தங்கும் விடுதி வசதியும் குறைந்த கட்டணத்தில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.  

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பயிற்சியில் பங்கேற்க முன் பதிவு செய்வது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 8668100181 / 9360221280. திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES