Gajakesari Yogam: ஜோதிடத்தில் 9 கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றி வருகின்றன. கிரகங்களின் பெயர்ச்சியின்போது, சில ராஜயோகங்களும் உருவாகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்கு முன்பு சக்திவாய்ந்த ராஜயோகம் ஒன்று உருவாக உள்ளது. தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கிடையில், நவம்பர் 3ஆம் தேதி கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. நவம்பர் 3ஆம் தேதி சிம்ம ராசியில் வியாழன், சந்திரன் சேர்க்கை நடக்கிறது.
இதனால், அன்றைய தினம் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த இணைப்பு தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் வெற்றியைத் தருவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்களின் நிதி நிலையையும் மேம்படுத்தும். கஜகேசரி ராஜயோகத்தால் 6 ராசிகளுக்கு நன்மைகள் உண்டாகும்.
கஜகேசரி ராஜயோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையல் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து பணிகள் முடிவடைய வாய்ப்புள்ளது. புதிய தொழில் தொடங்கவும் சிறந்த காலமாக இருக்கும். தங்கள் வருமானத்தை அதிகரிக்க வழிகளைக் கண்டறியவும் முயற்சி செய்யலாம். நிதி விஷயத்தில் ஒரு முறையான திட்டத்தைத் தீட்டி, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உங்களுக்கு இருந்து வந்த நிதி சிக்கல்கள் தீரும். புதிய வாகனம், வீடு, நகை வாங்கும் யோகம் இருக்கிறது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கஜகேசரி ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை கொடுக்கும். இந்த யோகம் கடக ராசியின் 2ஆம் வீட்டில் உருவாகிறது. இதன் விளைவாக , கடக ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படக் கூடும். புதிய வருமான வழிகள் உருவாகலம். தொழில், வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள். அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் நல்ல செய்திகளை பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு பலன்களை பெறுவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உறவினர்கள் இடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் தீரும்.
கஜகேசரி ராஜயோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். இநத் ராசியில் 11ஆம் வீட்டில் யோகம் உருவாகிறது. இதன் விளைவாக உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணியில் வெற்றி காணலம். நிதி நிலைமை வலுப்பெறும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். உங்கள் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். மேலும், பணியிடத்தில் போனஸ் அல்லது கூடுதல் நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கஜகேசரி ராஜயோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சில சாதகமாக இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு தங்கள வேலையில் முன்னேற்றம் இருக்கும். புதிய பொறுப்புகள் மட்டுமே கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் தொடர்புகள் மூலம் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளைக் காணலாம். நிதி விஷயங்களில் கவனமாக முடிவெடுப்பதும், சேமிப்புக்கு முன்னுரிமை அளிப்பதும் நல்லது. நிலம், வாகனம், விடு வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
கஜகேசரி ராஜயோகம் தனுசு ராசியின் 9ஆம் வீட்டில் நடக்கிறது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்க வாய்ப்புள்ளது. எந்தவொரு திட்டம் அல்லது பிற முயற்சியிலும் நீங்கள் மகத்தான வெற்றியை அடையலாம். நிலம், வாகனம் அல்லது வீடு வாங்குவதற்கான உங்கள் ஆசை நிறைவேறக்கூடும். உங்களுக்கு நிதிப் பலன்கள் கிடைத்தாலும், ஆடம்பரமான வாழ்க்கை முறை காரணமாக உங்கள் செலவுகளும் அதிகரிக்கக்கூடும். இந்தக் காலம் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகள் மேலும் வலுப்பெறக்கூடும்.
கஜகேசரி ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் நிதி விஷயங்களில் புதிய வாய்ப்புகள் எதிர்கொள்ளக் கூடும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான சாதகமாக வாய்ப்பு ஏற்படலாம். வேலை மாற்ற முயற்சிப்பவர்கள் பொருத்தமான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடலாம். நிதி நிலைமை மேம்படும். பொன் பொருள் சேரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். திருமண தடைகள் நீங்கி, நல்ல வரன் அமைய வாய்ப்புள்ளது.
பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை