SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழக அரசு வேலைவாய்ப்பு: பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

தமிழக அரசு வேலைவாய்ப்பு: பழங்குடியினர் நல இயக்ககத்தில் மேலாளர் பணிகள். தேர்வு கிடையாது, விண்ணப்பிக்க அக்டோபர் 26 கடைசி நாள் ஆகும்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 16, 2026, 08:56 AM IST | Updated: Oct 16, 2026, 09:09 AM IST
Join

தமிழ்நாடு அரசின் சமூக நீதித் துறையின் கீழ் இயங்கி வரும் பழங்குடியினர் நல இயக்ககம் சார்பில் புதிய வேலைவாய்ப்புச் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமுள்ள பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கும், கள அளவில் கண்காணிப்பதற்கும் ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை வரவேற்கப்படுகிறது.  

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் சென்னையில் உள்ள பழங்குடியினர் நல இயக்ககத்தின் தலைமை அலுவலகத்திலோ அல்லது தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களிலோ ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.  

பணியிடங்கள் மற்றும் கல்வித்தகுதி விவரங்கள்

1. திட்ட மேலாளர் 
  
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி (MSW), சமூகவியல் (M.A. Sociology), வேளாண்மை / தோட்டக்கலைத் துறையில் முதுகலை பட்டம் (M.Sc. Agri/Horti), வணிக நிர்வாகம் (MBA) அல்லது வாழ்வாதாரம் குறித்த அனுபவத்துடன் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

பணி அனுபவம்: அரசுத் துறை, தொண்டு நிறுவனங்கள், வேளாண்மை, FPO/சங்க மேலாண்மை போன்றவற்றில் வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாடு அல்லது திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நலிவடைந்த பிரிவினருடன் பணியாற்றிய குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் அவசியம்.  

2. உதவித் திட்ட மேலாளர்

கல்வித்தகுதி: வேளாண்மை / தோட்டக்கலை அறிவியல் (B.Sc. Agri/Horti), சமூகப் பணி (BSW), வணிக நிர்வாகம் (BBA), சமூகவியல் (B.A. Sociology) அல்லது வாழ்வாதாரம் குறித்த அனுபவத்துடன் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.  

பணி அனுபவம்: தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  

முக்கியப் பொறுப்புகள்

இப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரடியாகக் களப்பயணங்களை மேற்கொண்டு அரசுத் திட்டங்களைக் கண்காணித்தல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPO) மற்றும் உற்பத்தியாளர் குழுக்களை நிர்வகித்தல், பழங்குடியினர் உற்பத்திப் பொருட்களுக்கான டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட முக்கியப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழ்நாட்டின் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இத்தேர்வில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழுமையான சுயவிவரக் குறிப்பு (CV) மற்றும் தேவையான ஆவணங்களை tntribalwelfare2018@gmail.com என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

மின்னஞ்சல் தலைப்பு: விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சலின் பொருள் பகுதியில் "Application for the Post of Project Manager / Assistant Project Manager – <Candidate Name>" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.  

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 26.10.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டும்.  

விவரங்கள் மற்றும் EoI பதிவிறக்கம்: https://www.tntribalwelfare.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.   தொடர்பு எண்கள்: கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் பொன்வைத்தியநாதன் (9489941941) அல்லது சிவக்குமார் (8489458489) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES