• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகள்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகள்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

TN Government Announcement: 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி படிப்புகள் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 06, 2026, 05:39 PM IST|Updated: Nov 06, 2026, 05:48 PM IST
joinshare
சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகள்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
போலீசாரை மிரட்டி கத்தியால் வெட்ட முயற்சி! போதை இளைஞரின் வெறிச்செயல்..

போலீசாரை மிரட்டி கத்தியால் வெட்ட முயற்சி! போதை இளைஞரின் வெறிச்செயல்..

2

”ஒரு வருஷம் பொறுங்க.. விஜய் அண்ணன் ஆட்டம் தெரியும்".. எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி

3

மூக்குத்தி அம்மன் 2 vs சீன் vs ராமாயணா : தீபாவளி வின்னர் யார்? மக்களுக்கு பிடித்த படம் எது?

4

சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகள்.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

5

ரூ. 40 கோடி சம்பளம் வேண்டுமாம்.. ஐபிஎல் அணிகளிடம் டிமெண்ட் வைக்கும் வீரர்கள்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் சுயநிதி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான (BAMS / BSMS/BUMS/BHMS) மருத்துவப் பட்டப்படிப்புகளில், அரசு ஒதுக்கீடு / அரசிடம் ஒப்படைக்கப்பட்ட இடங்கள், நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அகில இந்திய ஒதுக்கீடு ஆகியவற்றின் கீழ் மூன்று சுற்று இணையவழி கலந்தாய்வுகள் நிறைவடைந்த பின்னரும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான சேர்க்கைக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகள்

பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான www.tnayushselection.org கொள்ளலாம். உரிய தகவல் என்ற வலைதளங்களில் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்து இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழியிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பெறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (இளநிலை மருத்துவம்) (NEET-UG) 2026-ல் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் /பி.எச்.எம்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள். கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnayushselection.org என்ற வலைதளத்தில் உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

இறுதி காலியிடங்களுக்கான சுற்றின் காலியிட விவரங்கள் தேர்வுக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnayushselection.org-ல் பதிவேற்றம் செய்யப்படும். விண்ணப்பிக்கும்முன் உரிய தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/JPEG வடிவில் பதிவேற்றவும்.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும். விண்ணப்பதாரர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் / அரசுக்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

படிப்புப் பிரிவு: பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ்

படிப்பிற்கான காலம் : 5 1/2 ஆண்டுகள்

படிப்பிற்கான கல்வித்தகுதி : 10+2 (அறிவியல் பாடங்களில் தேர்ச்சி);

இணையவழி விண்ணப்பக் கட்டணம்

  • OC, BC. BCM, MBC /DNC பிரிவினர் - ரூ.500 செலுத்த வேண்டும்.
  • SC, SCA & ST பிரிவினர் - விலக்கு அளிக்கப்பட்டது.
  • அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்) - ரூ.1,000
  • நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் (அனைத்து பிரிவினர்) - ரூ.1,000 செலுத்த வேண்டும்.
  • இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் - 06.11.2026 முதல்

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் - 12.11.2026 மாலை 5.00 மணி வரை பி.ஏ.எம்.எஸ் / பி.எஸ்.எம்.எஸ் / பி.யு.எம்.எஸ் / பி.எச்.எம்.எஸ் பட்டப்படிப்புகள் கலந்தாய்வு குறித்த விரிவான தொகுப்பேட்டினைப் பார்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Education