SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மாதம் ரூ.58,000 சம்பளம்! 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசின் வேலை

Ramanathapuram Job: ராமநாதபுரத்தில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Umabarkavi K
Published: Aug 21, 2026, 09:54 AM IST | Updated: Aug 21, 2026, 10:12 AM IST
Join

Ramanathapuram Job: தமிழக அரசு மாவட்ட வாரியாக பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பணிக்கான முழு விவரத்தை பார்ப்போம்.

ராமநாதபுரத்தில் எழுத்தர் வேலை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் பதிவறை எழுத்தர் நிலையில் ஏற்பட்ட ஆதி திராவிடர் குறைவு பணியிடத்தினை பூர்த்தி செய்யும்/நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடம் இருந்து செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நேரிலோ/தபால் மூலமாகவே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் பதிவறை எழுத்தர் பணிக்கு 1 இடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதை பொறுத்தரைவ, 18 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. முன்னாள் ராணுவ வீரர் 18 முதல் 55 வயது வரை இருக்க வேண்டும.

ஆதிதிராவிடருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனறும் பொது பிரிவினர் முன்னுரிமை அற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவறை எழுத்தர்  பணிக்கு மாத சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.58,600 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். (இருப்பிட சான்று தொடர்புடைய வட்டாட்சியரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்).

வயது மற்றும் கல்வித்தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும். தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

பதிவறை எழுத்தர் பணிக்கு ராமநாதபுரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  

இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணபத்தினை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.09.2026 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.

முகவரி - ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், முதுகுளத்தூர் 623 704, இராமநாதபுரம் மாவட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES