டிஎன்பிஎஸ்சி: குரூப் 2 தேர்வு இலவச பயிற்சி.. எப்படி சேரலாம்? அலர்ட் தேர்வர்களே
TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என சேலம், திருநேல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு எப்படி விண்ப்பிக்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
TNPSC Group 2 Exam: தமிழக அரசின் பெரும்பாலான பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குரூப் 2 முதல் நிலை தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருநெல்வேலி, சேலம் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருநெல்வேலி குரூப் 2 இலவச பயிற்சி
இதுகுறித்து திருநெல்வேலி ஆட்சியர் ஆனந்த் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆண்டுதோறும் அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு போட்டித்தேர்வுகளை நடத்துகிறது. 2026ஆம் ஆண்டு குரூப்-2/2A தேர்விற்கான அறிவிக்கை 11.08.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
முதல் நிலை தேர்வு 01.11.2026 நடைபெறும் எனவும், மொத்த பணிக்காலியிடங்கள் 821 எனவும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
TNPSC Group-2/2A தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து TNPSC Group-2/2A தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24.08.2026 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு Smart Board வசதியுடன் நடத்தப்படுகிறது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளன.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள திருவனந்தபுரம் ரோடு, ரயில்வேகேட் அருகில், குலவணிகர்புரம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்திற்கு 24.08.2026 அன்று காலை 10.30 மணிக்கு Passport Size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு 9499055929 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் மற்றும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற TELEGRAM Channel-லில் இணைந்து பயிற்சி குறித்த தகவல்களை பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் குரூப் 2 இலவச பயிற்சி
சேலம் ஏற்காடு பிரதான சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயத்தால் அறிவிக்கப்படவுள்ள TNPSC Group II & IIA முதல்நிலை (Preliminary) தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகின்ற 28.08.2026 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பானது போட்டித்தேர்வுகளில் அனுபவம் மிக்க பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது.
மேலும், இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் TNPSC Group II & IIA முதல்நிலை (Preliminary) தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சேலம் ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.