• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /தேர்வு கிடையாது! சென்னை மாநகராட்சியில் 173 காலிப் பணியிடங்கள்.. 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு கிடையாது! சென்னை மாநகராட்சியில் 173 காலிப் பணியிடங்கள்.. 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Chennai Corporation Jobs: சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சி பணிக்கு 8ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளடு. இந்த பணிக்கு டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கூற

Written ByUmabarkavi K
Published: Nov 29, 2026, 16:05 IST|Updated: Nov 29, 2026, 16:24 IST
joinshare
தேர்வு கிடையாது! சென்னை மாநகராட்சியில் 173 காலிப் பணியிடங்கள்.. 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 30-க்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதுடன் இதையும் செய்வது அவசியம்

ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 30-க்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதுடன் இதையும் செய்வது அவசியம்

2

தேர்வு கிடையாது! சென்னை மாநகராட்சியில் 173 காலிப் பணியிடங்கள்.. 8ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

3

குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

4

“அப்பாவை காணோம்” என கலாய்த்த தவெக-இப்போ டெல்லியே தேடி வருது! MKS மாஸ் கம்பேக்..

5

டிசம்பர் முதல் வெளுக்கப்போகும் கனமழை.. தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அப்டேட்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Corporation Jobs: தமிழக அரசு மாவட்ட வாரியாக   காலிப் பணியிடங்களை நிரப்பி வருகிறது. குறிப்பாக, துறை வாரியாக காலியாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து தற்காலிக அடிப்படையில் பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. அதாவது, மருத்துவ அலுவலர்,  பல்நோக்கு சுகாதார பணியாளர்,  ஆதரவுப் பணியாளர் என மொத்தம் 174 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் (Urban Health & Wellness Center) ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, கீழ்க்கண்ட பணியாளர்களை நியமிக்க சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம் முன்மொழிகிறது.  எனவே, காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் குறைந்தபட்சக் கல்வித் தகுதிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

பணி விவரம்   காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை
மருத்துவ அலுவலர் (Medical Officer) 44
MPHW / பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (சுகாதார ஆய்வாளர் - நிலை II) -ஆண்59
ஆதரவுப் பணியாளர் (Support Staff)71
                                                                                                                                     மொத்தம்174 காலிப் பணியிடங்கள்

கல்வித்தகுதி

சென்னை மாநகராட்சியில் மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்   அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்ட MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் படிப்புகள் இந்திய மருத்துவக் கவுன்சில் / NMC (Medical Council of India / NMC)-ல் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க: தூத்துக்குடி: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? மாதம் ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உயிரியல் (Biology) அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் (Botany and Zoology) பாடங்களுடன் பிளஸ் டூ (+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்குநரால் வழங்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் / அறக்கட்டளை / பல்கலைக்கழகங்கள் / நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் காந்திகிராம் கிராமிய நிறுவனம் (Gandhigram Rural Institute) ஆகியவற்றால் வழங்கப்படும் இரண்டு ஆண்டு பலநோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்)/ சுகாதார ஆய்வாளர் /சுகாதாரப் பரிசோதகர் (Multipurpose Health Worker (Male) / Health Inspector / Sanitary Inspector) பயிற்சிப் படிப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஆதரவு பணியாளர் பணிக்கு குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது விவரம்

  • மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு  35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆதரவு பணியாளர் பணிக்கு 45 வயதுக்கள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மாத சம்பளம்

  • சென்னை மாநகராட்சியில் மருத்துவ பணியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.63,000 வழங்கப்படும்.
  • பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.17,500 வழங்கப்படும்.
  • ஆதரவு பணியாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.11,000 வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட பணிக்ளுக்கு chennaicorporation.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 600 003 என்ற முகவரிக்கு டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தூத்துக்குடி: தமிழில் எழுத, படிக்க தெரியுமா? மாதம் ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

தேவையான ஆவணங்கள்

விண்ணப்ப படிவத்துடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்பு சான்றிதழ்,  10,12ம் வகுப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முகவரிச் சான்று/ஆதார்/பான்/வாக்காளர் அட்டை ஆகிய நகல்களை சேர்த்து அனுப்ப வேண்டும். மேலும், MBBS அனைத்து செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்கள், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் / NMC (Tamil Nadu Medical Council / NMC)-ஆல் வழங்கப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் பதிவுச் சான்றிதழ், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட பலநோக்கு சுகாதாரப் பணியாளர் (HI) பயிற்சிச் சான்றிதழ், 8-ஆம் வகுப்புச் சான்றிதழ் ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu