வேலை தேடுபவரா? சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
Chennai Job Fair: சென்னையில் நாளை (நவம்பர் 27) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8,10, 12ம் வகுப்பு படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியயல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, வேலைவாய்ப்பு எங்கு நடக்கிறது? எப்படி கலந்து கொள்ளலாம் என்பது குறித்த விவரத்தை பார்ப்போம்.
Chennai Job Fair November 27: தமிழக அரசு மாவட்ட தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்று தரும் வகையில், தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில், தலைநகர் சென்னையில் நாளை (நவம்பர் 27) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.
சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் முகாம்கள் வேலைவாய்ப்பற்ற தொழில்நெறிவழிகாட்டும்மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு தனியார்துறையில் வேலைவாய்ப்புகள் பெற்றுவழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில்பணி நியமனம் பெற்றுவருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையங்களும் இணைந்து 27.11.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
வேலைவாய்ப்பு முகாமில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ டிப்ளமோ,பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை அனைவரும்(மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
வேலைவாய்ப்பு முகாம் எங்கு, எப்போது நடக்கிறது?
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள்தங்கள் விவரங்களை தமிழ்நாடுஅரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in ) பதிவேற்றம் செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்?
1.சென்னை வேலைவாய்ப்பு முகாம் எங்கு, எப்போது?
இந்த முகாம் 27.11.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, சென்னை-32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்) நடைபெறுகிறது.
2. இம்முகாமில் கலந்து கொள்ளத் தேவையான கல்வித்தகுதி என்ன?
8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் (டிகிரி) பெற்ற அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.
3. இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு எப்படி விண்ணப்பிப்பது?
முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்களது விவரங்களை தமிழ்நாடு அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) முன்கூட்டியே பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.