SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பூந்தமல்லி டூ வடபழனி.. மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் கட்டணம் அறிவிப்பு - எவ்வளவு?

Chennai Metro Yellow Line: சென்னை மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்திற்கான கட்டணத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பூந்தமல்லி முதல் வடபழனி வரை எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது என்பது குறித்த விவரத்தை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Sep 29, 2026, 15:04 IST | Updated: Sep 29, 2026, 15:14 IST
Join

Chennai Metro Yellow Line: சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போது பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை பச்சை வழித்தடத்திலும், விமான நிலையம் வரை விம்கோ நகர் பணிமனை வரை நீல வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

பூந்தமல்லி டூ வடபழனி மெட்ரோ சேவை

இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் 116 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர், மாதவரம் முதல் சிப்காட் வரையும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே  அனைத்து பணிகளும் முடிவடைந்து, திறப்புக்காக காத்திருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாததே அனைத்து பணிகளும், சோதனை ஓட்டம் என அனைத்து முடிந்த நிலையிலும்,  பல்வேறு காரணங்களால் வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் திறப்பு தாமதமானது. இந்த நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுமாகு குறையும்.

தற்போது சாலை வழியாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி செல்ல ஒரு மணி நேரத்துக்கும் மேலாகும் நிலையில், மெட்ரோ சேவை தொடங்கப்பட்டால் இந்த பயண நேரம் சுமார் 20 முதல் 25 நிமிடங்களாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடபழனி ஏற்கனவே மெட்ரோ முதல் கட்டப் பாதையில் செயல்படும் முக்கிய நிலையமாக உள்ளது. இரண்டாம் கட்டப் பாதையும் வடபழனியுடன் இணைவதால், அங்கிருந்து மெட்ரோ ரயிலை மாற்றிப் பயணித்து விமான நிலையம், சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்வது எளிதாகும்.

மஞ்சள் வழித்தடத்தில் கட்டணம் அறிவிப்பு

மஞ்சள் வழித்தடத்தில் பூந்தமல்லி - வடபழனி வரை மெட்ரோ கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,

மேலும், கியூஆர் கோட், சிங்கார சென்னை கார்டு, ஸ்மார்ட் கார்டு, யுபிஐ உள்ளிட்டவை மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தால் வழக்கம்போல் 20 சதவீதம் கட்டணத்தில் தள்ளுபடியை பெறலாம. எனவே, அக்டோபர் 11ஆம் தேதி துவங்கப்படும் பூந்தமல்லி வடபழனி மெட்ரோ ரயில் கட்டணத்தை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப திட்டமிட வேண்டும்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES