SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னையில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 10, 2026, 06:03 PM IST | Updated: Oct 10, 2026, 06:26 PM IST
Join

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி, சென்னையில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களைக் கண்டறிந்து மீட்கும் சிறப்பு கூட்டாய்வு தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மண்ணடி பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

கோயம்பேடு மற்றும் மண்ணடியில் சிறார்கள் மீட்பு

கடந்த 07.10.2026 அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொழிலாளர் உதவி ஆணையர், 2-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆய்வர் மற்றும் மாவட்ட தடுப்புப் படை குழுவினர் இணைந்து மேற்கொண்ட ஆய்வின்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மு.சூரியா (15) என்ற வளரிளம் பருவ சிறுவன் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டார்.  

அதைத் தொடர்ந்து, 08.10.2026 அன்று மண்ணடி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தொழிலாளர் உதவி ஆணையர், 1-ம் வட்ட தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள், சிறார் சிறப்பு காவல் பிரிவினர், குழந்தைகள் உதவி மையப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் கூட்டாகச் சோதனை நடத்தினர். அப்போது மண்ணடி போலீஸ் காலனி, மெட்ரோ வளாகத்தில் உள்ள 'Planet' என்ற டீக்கடையில் வேலை செய்து கொண்டிருந்த ராகுல்குமார் (15) என்ற சிறுவனும் மீட்கப்பட்டார்.  

குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைப்பு, சட்ட நடவடிக்கை

மீட்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் CSR பதிவு செய்யப்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக சென்னை குழந்தைகள் நலக்குழுவிடம் (CWC) ஒப்படைக்கப்பட்டனர். மேலும், அச்சிறுவர்களைப் பணியில் அமர்த்திய கடை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு, குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன.

சட்ட விதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை

* குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம், 1986-ன் படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு தொழிலிலும் பணியமர்த்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.  

* 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை எந்தவித அபாயகரமான தொழில்களிலும் ஈடுபடுத்தக் கூடாது.  

இந்த விதிகளை மீறிச் சிறார்களைப் பணியமர்த்துபவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் சிறார்களைப் பணியில் அமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், மீறினால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.   

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES