• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /எல்நினோ பாதிப்பு! தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கும் மாவட்டங்களின் பட்டியல் - Explained

எல்நினோ பாதிப்பு! தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கும் மாவட்டங்களின் பட்டியல் - Explained

எல்நினோ பாதிப்பு காரணமாக காவிரி டெல்டா உட்பட 14 மாவட்டங்களில் மழை பற்றாக்குறை. பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்குத் தமிழக அரசு வெளியிட்ட அவசர வழிகாட்டுதல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 25, 2026, 07:30 IST|Updated: Nov 25, 2026, 07:43 IST
joinshare
எல்நினோ பாதிப்பு! தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கும் மாவட்டங்களின் பட்டியல் - Explained
Image Credit: El Nino Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்நினோ பாதிப்பு! தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கும் மாவட்டங்களின் பட்டியல் - Explained

எல்நினோ பாதிப்பு! தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கும் மாவட்டங்களின் பட்டியல் - Explained

2

தமிழக அரசு வேலைவாய்ப்பு: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்! ரூ.58,500 வரை சம்பளத்தில் வேலை

3

டாஸ்மாக் அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிரடி உத்தரவு: விவரம் உள்ளே!

4

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. 3 நாட்களுக்கு இந்த 2 ரயில்கள் தாமதமாகும்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

5

அனைத்து பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் கொடுப்பது கட்டாயம்! அரசு அதிரடி உத்தரவு..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவை விடக் குறைவாகப் பெய்துள்ளதால், மாநிலத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலை உருவாகி வருவதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகச் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வப் பத்திரிகை செய்தியில், நடப்புப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட 20 முதல் 60 சதவீதம் வரை மழை குறைவாகப் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இல்லாத சூழல் நிலவுவதால், வடகிழக்கு மண்டலம், காவிரி டெல்டா மண்டலம் மற்றும் தென் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.  

மேலும் படிக்க  |18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மழையளவு மற்றும் மண் ஈரப்பதம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின்படி, பல மாவட்டங்களில் பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான மண் ஈரப்பதப் பற்றாக்குறை உருவாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாகத் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, அரியலூர், காஞ்சிபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் கணிசமான மழைப் பற்றாக்குறையும், குறிப்பிடத்தக்க அளவு பயிர் பாதிப்புகளும் காணப்படுவதால், இம்மாவட்டங்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  

தற்போதைய இந்தக் கடுமையான மழைப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாக 'எல் நினோ' நிகழ்வு அமைந்துள்ளது என அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. தற்போது பசிபிக் பெருங்கடல் மட்ட வெப்பநிலையானது +3°C-க்கும் மேல் உயர்ந்து, "வலுவான எல் நினோ" சூழல் நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் சீரற்ற மழைப்பொழிவு ஏற்பட்டு, பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் மண் ஈரப்பதம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மேலும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் முழுமையாக நிரம்ப வேண்டிய ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் போதிய நீர்வரத்தின்றி விரைவாக வறண்டு வரும் அபாயச் சூழல் ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையை எதிர்கொள்ளவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மாவட்டங்களில் பயிர் நிலை, நீர் இருப்பு மற்றும் வறட்சி பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேளாண்மைத் துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக வேளாண்மை மற்றும் சகோதரத் துறை அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய மாவட்ட அளவிலான கண்காணிப்பு உயர்மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நேரடிக் கள ஆய்வுகளை மேற்கொண்டு விவசாயிகளுக்குத் தேவையான பரிந்துரைகளை வழங்கி வருகின்றனர்.  

பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாக்க விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்ப வழிமுறைகளையும் அமைச்சர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, திறமையான நீர் மேலாண்மை, பயிர்களைக் காக்கும் உயிர்காக்கும் பாசனம் மற்றும் சமுதாய அடிப்படையிலான நீர் பகிர்வு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மண் ஈரப்பதக் குறைபாடு நிலவும் பகுதிகளில் 1% வெள்ளை பொட்டாஷ் மற்றும் PPFM (Pink Pigmented Facultative Methylotrophs) தெளிப்பு போன்ற வறட்சித் தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் வறட்சியிலிருந்து பயிர்களை மீட்டு, சேதத்தைக் குறைத்து மகசூலைப் பாதுகாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே, விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் விதமாக, தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இந்த வாரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த மழைப்பொழிவு தற்போது நிலவும் ஈரப்பதப் பற்றாக்குறைக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வேளாண்மைத் துறை மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழக வல்லுநர்கள் வழங்கும் ஆலோசனைகளை விவசாயிகள் தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை அலுவலர்களை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். மாநிலத்தின் வறட்சி நிலையைத் தமிழக அரசு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும், முதலமைச்சர் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் எனவும் அமைச்சர் வினோத் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer