SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

70 சவரன் நகை, கார்... உயிரை காவு வாங்கிய வரதட்சணை - புவனேஸ்வரிக்கு நடந்தது என்ன?

திருமணத்தின் போது பெண்ணுக்கு 50 சவரன் நகை, மாப்பிள்ளைக்கு 20 சவரன் நகை போட்டுள்ளனர். கார் மற்றும் பல லட்சம் பணமும் கொடுத்துள்ளனர். அப்படியிருந்த வரதட்சணையால் மன உளச்சலுக்கு ஆளாகி புவனேஸ்வரி தனது உயிரை மாய்த்துக்கொண்டார். புவனேஸ்வரிக்கு நடந்தது என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written By Sudharsan G
Published: Aug 31, 2026, 16:42 IST | Updated: Aug 31, 2026, 16:51 IST
Image Credit: Chennai Women Suicide | Image Source : Zee Bureau
Join

சென்னை பள்ளிக்கரணை அருகே புவனேஸ்வரி (27) என்ற பெண், கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி ஜானகிராமன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கணவர் ஜானகிராமன் செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அருகே உள்ள ஈச்சாங்கரணி பகுதியைச் சேர்ந்தவர்.

திருமணத்தின் போது புவனேஸ்வரிக்கு 50 சவரன் தங்க நகை போட்டதாகவும், மாப்பிள்ளை ஜானகிராமனுக்கு 20 சவரன் தங்க நகை போட்டதாகவும் புவனேஸ்வரி வீட்டின் தரப்பில் தெரிவித்தனர்.

உயிரைவிட்ட புவனேஸ்வரி

இந்நிலையில் நேற்று புவனேஸ்வரியின் பெற்றோர் வீடு அமைந்துள்ள சென்னை பள்ளிக்கரணையை அடுத்த எஸ்.கொளத்தூரில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் புவனேஸ்வரி தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

(வாசகர்கள் கவனத்திற்கு: தற்கொலைக்கு முயல்வது வாழ்வில் எந்த பிரச்னைக்கும், எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்)

புவனேஸ்வரியின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் அப்பகுதியில் அம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுவதால் கோயிலுக்கு சென்று வீடு திரும்பியப்போது புவனேஸ்வரியின் அறை பூட்டி இருந்ததால் சத்தமாக புவனேஸ்வரியை கூப்பிட்டுள்ளனர். அதற்கு எந்த ஒரு பதிலும் வராததால் கதவை தட்டியுள்ளனர்.

போலீசாருக்கு தகவல் சொன்ன தாய்

அப்பொழுதும் எந்த ஒரு பதிலும் வராததால் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே புவனேஸ்வரி உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அவரது தாய் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு புவனேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் புவனேஸ்வரி உயிரை மாய்த்துக்கொண்டது குறித்து அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பல திடுக்கிடும் தகவல்களை புவனேஸ்வரி வீட்டார் கூறியுள்ளனர்.

தாயார் கூறும் திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்

போலீசாரிடம் புவனேஸ்வரி தாயார் குமுதா கூறுவதாவது, "புவனேஸ்வரிக்கு 200 சவரன் தங்க நகை போட சொன்னதை எங்களால் செய்ய முடியவில்லை. எனது பெண்ணை தொடர்ந்து அவரது நாத்தனார் மற்றும் கணவர் வீட்டின் மூத்த மருமகன் ஆகியோர் தொடர்ந்து புவனேஸ்வரியை கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் புவனேஸ்வரி தனது உயிரை மாய்த்துக்கொண்டார்" என்றார்.

மேலும் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து குடும்பத்தில் பிரச்சனைகளும், மனரீதியான துன்பங்களும் இருந்ததாக புவனேஸ்வரி தாய், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தாரிடம் சொல்லி வந்ததாக கூறியுள்ளனர். புவனேஸ்வரி - ஜானகிராமன் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து அந்த குழதைக்கு கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் பிறந்தநாள் விழா கொண்டாடி உள்ளனர்.

மகன் பிறந்தநாள் விழாவிலும் சண்டை

அந்த பிறந்தநாள் விழாவில் குழந்தைக்கு 20 சவரன் தங்க நகை கேட்டதாகவும், புவனேஸ்வரியின் தாய் வீட்டில் குழந்தைக்கு 2 சவரன் மட்டும் போட்டதாகவும், அவர்கள் கேட்டப்படி 20 சவரன் போடாததால் கணவன் மனைவி இவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவன் - மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த வியாழக்கிழமை (ஆக. 28) அன்று புவனேஸ்வரி அம்மாவின் ஊரில் கோயில் திருவிழாவை காரணம் காட்டி அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

வரதட்சணை கொடுமையால்...

நேற்று மாலை புவனேஸ்வரி அவரது கணவர் ஜானகிராமனிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நீ வீட்டிற்கு வர வேண்டாம்... உங்கள் அம்மா வீட்டிலேயே இரு என்று கணவன் கூறியதாகவும், அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி புவனேஸ்வரி அவரது உயிரை மாய்த்துக்கொண்டதாக புவனேஸ்வரியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

தாயார் வைத்த கோரிக்கை

மேலும், புவனேஸ்வரி சிறிய விஷயத்திற்கு எல்லாம் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு ஒரு முடிவை எடுக்கக்கூடிய பெண் கிடையாது என்றும்; அவர் பி.எஸ்சி., எம்.எஸ்சி., பி.எட்., போன்ற பட்டப்படிப்பை படித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அவர் 10ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்தவர். அதுமட்டுமில்லாமல் ஒரு பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிக்கரணை போலீசார் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கை கிண்டி கோட்டாட்சியர் விசாரிக்க வழக்கை மாற்றியுள்ளனர். மேலும் கணவன் ஜானகிராமன் மட்டுமல்லாமல் அவருடைய தாய், தந்தை, தங்கை உள்ளிட்டோரும் புவனேஸ்வரியை தொடர்ந்து கொடுமைபடுத்தி வந்ததாகவும் தெரிவித்தனர். எனவே இவர்கள் அனைவரிடமும் முறையாக விசாரணை நடத்த தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES