சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், Calcutta (கொல்கத்தால்) மாநிலத்தின் பெயர், Kolkata என 2021ஆம் ஆண்டு, பெயர் மாற்றம் பெற்றது. தற்போது அதே போல மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரும் மாற்றம் பெற இருப்பதாக, அம்மாநிலத்தின் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில், சில மாதங்களுக்கு முன்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை, முதல் முறையாக பாஜக வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, பாஜகவின் சுவேந்து அதிகாரி, முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. மேற்கு வங்காளத்தின் பெயரை ‘பஸ்கிம் பங்கா’ என மாற்ற அந்த நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு, இந்த பெயர் மாற்றம் குறித்து மேற்கு வங்க பாஜக மாநில தலைவர் சமிக் பட்டாச்சாரியா உறுதி செய்திருந்தார். வாரணாசியில் பச்சிம் பங்கா எனும் பெயரில், ஒரு பவன் அமைப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “இனி நீங்கள் பங்களா அல்லது வங்காளம் எனும் பெயரை உச்சரிக்க வேண்டிய நிலையே இருக்காது” என்று கூறியிருந்தார். தொடர்ந்து, இதற்கான மசோதாவை மாநில அரசு, அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருந்தார்.
மேற்கூறிய பெயரில், ‘பச்சிம்’ என்றால், வங்க மொழியில் மேற்கு என பொருளாம். ‘பங்கா’ என்றால், ‘வங்காளம்’ என்று பொருள்படுமாம். இதனால், தங்களின் மாநிலத்தின் பெயரை, தங்கள் பெயரிலேயே வைக்க, அந்த மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது. இதையடுத்து, பாஜக அரசு இந்த பெயர் மாற்றத்திற்கும் தயாராகி வருகிறது.
தங்கள் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்பது, மேற்கு வங்காளத்தின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்துள்ளது. இருப்பினும், அங்கு ஆளும் கட்சிகளாக இருந்த கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இதற்கு ஒப்புதல் தெரிவிக்காமல் இருந்துள்ளன. மாநிலத்தின் பெயரை, மாற்றம் செய்யும் முயற்சிகள் இதனால் பல ஆண்டுகள் முடங்கிப்போய் இருந்துள்ளன.
சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்திருந்த நிலையில், இந்த பெயர் மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் தீவிரமாகி இருக்கிறது.
மேற்கு வங்கத்தின் பெயரை, மாற்றம் செய்வதற்கான முயற்சிகள், சுமார் 27 வருடங்களுக்கு முன், அதாவது, 1997ஆம் ஆண்டில் தொடங்கியதாக தெரிகிறது. ஆனால், அது எவ்வளவு முயற்சித்தும் நடந்தேறவில்லை. பின்னர், 2011ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, மம்தா பானர்ஜி அரசு ஆட்சி அமைத்தது. அப்போது, ‘பச்சிம் பங்கா’ எனும் பெயரை வைக்க முன்னெடுப்புகள் நடந்தன. அதற்கு ஏற்றார் போல அனைத்து கட்சி கூட்டத்திலும் இதற்கு ஆதரவு கிடைத்தது.
மத்திய அரசு, இதற்கு இறுதியில் ஒப்புதல் அளிக்காததால், அந்த பெயரை மாற்றம் செய்ய முடியாமல் போயிற்று. மம்தா பானர்ஜி அரசு, 2016ஆம் ஆண்டில், மீண்டும் மாநிலத்தின் பெயரை மாற்றும் முயற்சியை எடுத்தது. ஆனால், அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. இம்முறை, அந்த மாநிலத்தில் பாஜக அரசே ஆட்சியை பிடித்திருப்பதால், எளிமையாக ஒப்புதல் கிடைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தின் முதல்வர் சுவேந்து அதிகாரி, சமீபத்தில் தங்கள் மாநிலத்தின் பெயர் மாற்றம் குறித்து பேசினார். அப்போது, மேற்கு வங்கத்தை “பச்சிம் பங்கா” என்று பெயர் மாற்ற நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்து விட்டதாக கூறினார். அதோடு, வரும் டிசம்பர் 9ஆம் தேதி சட்ட்சபையில் இந்த திட்டம் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார். டிசம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை, மேற்கு வங்கத்தின் சட்டசபை கூடுகிறது என்பது குறிபிடத்தக்கது.
Calcutta எனும் பெயர், Kolkata என மாறியதற்கு காரணம், வங்காள மொழி பிரயோகம் மற்றும் உச்சரிப்பாகும். வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இருந்த உச்சரிப்பை நீக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த பெயர் மாற்றப்பட்டது. இது போல, ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றும் முறை எவ்வாறு நடக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா..?
முதலில், மாநில சட்டமன்றம் பெயர் மாற்றத்தைக்கோரி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு, குறிப்பக உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவதன் மூலமாக இதன் செயல்முறை தொடங்குகிறது. இருப்பினும், நாடாளுமன்றமும் ஒரு மசோதாவை தொடங்கலாம். உள்துறை அமைச்சகம், இந்திய நில அலவைத்துறை, இந்திய பதிவளர் ஜெனரல், அஞ்சல் துறை மற்றும் ரயில்வே அமைச்சகம் போன்ற முகமைகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ்களை கோரலாம்.
ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான மசோதாவை, குடியரசு தலைவரின் பரிந்துரையை பெற்ற பின்னரே, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏதேனும் ஒன்றில் அறிமுகப்படுத்த முடியும்.
குடியரசு தலைவர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதாவை அதன் கருத்துக்களுக்காக சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கிறார். மாநில சட்டமன்றத்தின் கருத்து ஆலோசனைக்குரியதே தவிர, அது நாடாளுமன்றத்தின் முடிவை கட்டுப்படுத்தாது.
குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகு, அல்லது மாநில சட்டமன்றம் தன்னுடைய கருத்துகளை சமர்ப்பித்த பிறகு, அந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகலிலும் விவாதிக்கப்பட்டு, பின்னர் அதற்கு ஏற்ற பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படலாம். இது, ஒரு சாதாரண சட்டமாகவே கருதப்படும். மேலும், இதற்கு 368 பிரிவின் கீழ் அரசியலமைப்பு திருத்தமும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.