ஜோதிட சாஸ்த்திரன்படி, நவகிரகங்களின் இளவரசனாக அழைக்கப்படுபவர் புதன் பகவான். ஒவருடைய அறிவுத்திறன், கல்வி, பேச்சாற்றல், வணிகம் உள்ளிட்டவற்றில் புதன் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்ற கிரகங்களுடன் ஒப்பிடும்போது குறுகிய கால இடைவெளியில் தனது ராசியை மாற்றும் கிரகங்களில் புதனும் ஒருவர்.
தற்போது துலாம் ராசியில் சஞ்சரித்து வரும் புதன், வரும் டிசம்பர் 2 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு இடம்பெயர உள்ளார். செவ்வாய் பகவானின் ஆளுகைக்கு உட்பட்ட விருச்சிக ராசியில் புதன் டிசம்பர் 22 ஆம் தேதி வரை சஞ்சரிக்கிறார். அதன்பிறகு தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைய உள்ளார்.
புதனின் இந்த இடமாற்றம் 12 ராசிகளிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக சிம்மம், துலாம், விருச்சிகம் ஆகிய மூன்று ராசிகளை சேர்ந்தவர்களுக்கு தொழில், பொருளாதாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகலாம். இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
சிம்ம ராசியின் நான்காவது வீட்டில் புதன் சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக தொழில் மற்றும் பணியிட சூழலில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். இதுவரை உழைத்ததற்கான அங்கீகாரம் கிடைப்பதுடன், உங்களது செயல்திறனை உயர் அதிகாரிகள் பாராட்டும் சூழலும் உருவாகலாம். புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரக்கூடும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை மேம்படுவதுடன், சட்டம் தொடர்பான விவகாரங்களிலும் சாதகமாஞ முடிவுகளை எதிர்பார்க்கலாம். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். அந்த முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலன்களை தரக்கூடும்.
துலாம் ராசியின் இரண்டாவது வீட்டிற்கு புதன் பெயர்ச்சி அடைவதால், இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கக்கூடும். ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படலாம். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான சூழலும் அமையலாம். புதனின் சஞ்சாரம் பேச்சாற்றலுக்கும் சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. உங்களது பேச்சுத் திறனை பயன்படுத்தி முக்கியமான காரியங்களை வெற்றிகரமாக முடிக்கலாம். மாணவர்களுக்கும் இந்த காலகட்டம் அனுகூலமாக அமையக்கூடும். ஒட்டுமொத்தமாக பொருளாதார வளர்ச்சியுடன் வாழ்க்கைத் தரமும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
புதன் பகவான் விருச்சிக ராசியின் முதல் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், முக்கியமான முடிவுகளை எடுக்கும் திறனும் மேம்படலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடும். தாமதமாகி வந்த பணிகளை முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பொருளாதார நிலை வலுப்பெறுவதுடன், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். சிலருக்கு திடீர் பணவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவுவதுடன், வசதியான வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பும் அமையலாம்.
(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)