SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

குழந்தையை விற்ற தாய்... பிறக்கும் முன்னரே போட்ட டீலிங் - சென்னையில் நடந்தது என்ன?

பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை, பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாய், இடைத்தரகர்களாக செயல்பட்ட பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Written By Sudharsan G
Published: Aug 27, 2026, 15:23 IST | Updated: Aug 27, 2026, 15:28 IST
Image Credit: File Image : Zee Bureau
Join

சென்னை வில்லிவாக்கம் சன்னதி தெருவில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவின், சமூகப் பணியாளர் மலர்விழி போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில், வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

4 பேர் மீது வழக்குப்பதிவு

குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக தாய் பவித்ரா, இடைத்தரகர்கள் தனம் மற்றும் ஆண்டாள் உள்ளிட்ட 4 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலா ரூ.50 ஆயிரம்

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், குழந்தையின் தாய் பவித்ரா, இடைத்தரகர்கள் தனம் மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆந்திராவுக்கு அனுப்பப்பட்ட குழந்தை

குழந்தை ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனால், வில்லிவாக்கம் தனிப்படை காவல் துறையினர் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 4 பேரிடம் இருந்து சில அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

கருவிலேயே பராமரிப்பு செலவு

அதாவது, குழந்தை தாயின் கருவில் வளரும் போதே பராமரிப்பு செலவுக்காக பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குழந்தையை வாங்குவதற்காக யார் விலை பேசியது, குழந்தை விற்பனை மற்றும் கடத்தல் விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முக்கிய நபர்களை கைது செய்யவும், குழந்தையை மீட்டு பாதுகாப்பாக மீண்டும் கொண்டுவரவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் நடந்த மற்றொரு சம்பவம்

இதுபோன்ற கடந்த டிசம்பர் 4ஆம் தேதி அன்று சென்னை காசிமேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், பவர் குப்பத்தை சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, தங்களால் குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் அந்த தம்பதி குழந்தையை விற்பனை செய்ய முடிவெடுத்து, ஈரோட்டில் குழந்தை இல்லாத ஒரு தம்பதியிடம் ஜனவரி 14ஆம் தேதி அன்று விற்பனை செய்துள்ளனர். குழந்தை இல்லாத ஈரோடு தம்பதியினர், சென்னை காசிமேடு பகுதிக்கு வந்து ரூ.3.80 லட்சம் பணம் கொடுத்து குழந்தையை பெற்றுள்ளனர்.

இதில் 3 லட்ச ரூபாய் குழந்தையின் தாய்க்கு கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் இடைத்தரகர்களாக இருந்து பாக்கி தொகை பங்கீட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து 3 இடைத்தரகர்களையும் காசிமேடு போலீசார் கடந்த ஜனவரி 21ஆம் தேதி கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES