முரசு புயல்: சென்னைக்கு ஆபத்தா? 2 நாட்களுக்கு கனமழை.. வெதர்மேன் வார்னிங்
Cyclone Murasu Latest Update: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறும். இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த ’முரசு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.
Cyclone Murasu Latest Update: அக்டோபர் 30ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 31ஆம் தேதி காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து நேற்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.
முரசு புயல்
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த 06 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Depression), அதன் பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் (Cyclonic Storm) வலுப்பெறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நவம்பர் 2ஆம் தேதி தேதி மாலை வேளையில் நகரக்கூடும்.
மேலும் படிக்க: 30,000 பெண்களுக்கு ஆடுகள்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு.. யாரெல்லாம் பெறலாம்?
வெதர்மேன் சொன்ன விஷயம்
முரசு புயல் சென்னையில் எந்தளவுக்கு நெருங்கி வரும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், 'முரசு' (Murasu) புயல் தெற்கு ஆந்திரக் கடற்கரையை நெருங்கி வரும் நிலையில், அதன் மழை மேகங்கள் நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தை நோக்கி விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது;
இதில் சென்னையும் அடங்கும். புயல் நெருங்கி வரும். ஆனால், அதே சமயம் சென்னையை தாக்காமல் கடந்து செல்லும். தற்போதைய வெப்பமான வானிலை மாறி, இதமான மழையுடனும் குளிர்ச்சியுடனும் கூடிய சூழல் நிலவும்.
அடர்ந்த மேகக் கூட்டங்களும் தீவிர மழையைத் தரும். அப்படியே தெற்கு-மத்திய ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும். இருப்பினும், இந்த வானிலை அமைப்பு வடக்கு நோக்கி நகரும்போது, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்கள், மழையைத் தரும். புயலால் ஏற்படும் கனமழையை சென்னை தவறவிடக்கூடும். ஆனால் புயல் கடந்து செல்லும் போது மிதமான மேகங்கள் நகரைக் கடந்து சென்று, அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
முரசு புயலால் எங்கெல்லாம் மழை பெய்யும்?
தெற்கு-மத்திய ஆந்திரா: இங்குதான் அதிக அளவிலான, மிகக் கனமான முதல் அதீத கனமழை வரை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் (KTCC): புயலின் தாக்கம் வடக்கு நோக்கி நகரும்போது, இந்த பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை: முரசு புயலால் சென்னையில் அவ்வப்போது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் மிக பலத்த மழை பொழிவு இருக்காது. பலத்த மழை நகரத்திற்கு வெளியே இருக்கும். வட சென்னையில் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில், ஓரளவு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
வட மாவட்டம்: பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்.
முரசு புயலால் சென்னையில் மழைப்பொழிவு முற்றிலும் இல்லாமல் போகாது. ஆனால், மிக அதிகனமழை தெற்கு-மத்திய ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் சென்னையைக் கடந்து செல்வதை நேரலை ரேடார் (live radar) மூலம் கவனிப்பதும், மேகங்களின் நகர்வை நேரில் பார்ப்பதும் சுவாரஸ்யமாக இருக்கும்.
புயலின் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட, சென்னையில் குறிப்பிடத்தக்க அளவு மழை கிடைக்க வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களில், சென்னையின் சில பகுதிகளில் புயலின் தாக்கத்தால் 4 முதல் 7 செ.மீ வரை மழை பெய்தால் அது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும்" என்று கூறினார்.
மேலும் படிக்க: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை முதல் நிறுத்தமா? அதிரடி அறிவிப்பு