• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /டாஸ்மாக்கில் இன்று முதல் புதிய ரூல்ஸ்.. மதுபானம் வாங்க கட்டுப்பாடுகள்.. என்னெல்லாம்?

டாஸ்மாக்கில் இன்று முதல் புதிய ரூல்ஸ்.. மதுபானம் வாங்க கட்டுப்பாடுகள்.. என்னெல்லாம்?

Tasmac New Rule November 1: தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1ஆம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மதுபானத்திற்கு ரூ.10 கூடுதல் கட்டணம், ஆன்லைன் பரிவர்த்தனை கட்டாயம் என இன்று முதல் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளன.

Written ByUmabarkavi K
Published: Nov 01, 2026, 09:45 AM IST|Updated: Nov 01, 2026, 10:01 AM IST
joinshare
டாஸ்மாக்கில் இன்று முதல் புதிய ரூல்ஸ்..  மதுபானம் வாங்க கட்டுப்பாடுகள்.. என்னெல்லாம்?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சிம்மத்திற்கு செல்லும் செவ்வாய்.. நவம்பர் 12 முதல் 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!

சிம்மத்திற்கு செல்லும் செவ்வாய்.. நவம்பர் 12 முதல் 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்!

2

6 வயது சிறுமி மீது கொலை வெறித்தாக்குதல்! 8 வயது சிறுவன் செய்த கொடூரம்.. பள்ளியில் ஷாக்

3

டாஸ்மாக்கில் இன்று முதல் புதிய ரூல்ஸ்.. மதுபானம் வாங்க கட்டுப்பாடுகள்.. என்னெல்லாம்?

4

Chalo Dilli: முதலில் போராட்டம்... பின்னர் ஷாப்பிங்... ராகுல் காந்தி போட்ட வீடியோ

5

முரசு புயல்: சென்னைக்கு ஆபத்தா? 2 நாட்களுக்கு கனமழை.. வெதர்மேன் வார்னிங்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tasmac New Rule November 1: தமிழகம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, டாஸ்மாக்கில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில், நவம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளன. இன்று முதல் டாஸ்மாக்கில் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. அது என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஆன்லைன் பரிவர்த்தனை கட்டாயம்

தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒரு மதுபானம் விற்பனையில் ரூ.1000க்கு மேல் இருந்தால் மின்னணு முறையில் (UPI - PhonePe, G Pay, Paytm, BHIM) மட்டுமே பணம் செலுத்த வேண்டும். 2027, ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒரு மதுபானம் விற்பனையில் ரூ.500க்கு மேல் இருந்தால் கட்டாயம் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மின்னணு முறையில் விற்பனைத் தொகை பெறப்படும்போது ஒவ்வொரு பரிவர்த்தனையின் தொகையும் நேரமும் பதிவாகுவதால், MRP-க்கு மேல் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது தவிர்க்கப்படுவதுடன், விற்பனைத் தொகை நேரடியாகக் கழகத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் படிக்க: 30,000 பெண்களுக்கு ஆடுகள்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு.. யாரெல்லாம் பெறலாம்?

இன்று முதல் மதுபானம் விலை உயர்வு

நவம்பர் 1ஆம் தேதி முதல் குவாட்டர், ஃபுல் என அனைத்து சரக்குகளுக்கும் ரூ.10 இன்று முதல் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசின் TASMAC நிறுவனம் நவம்பர் 1, 2026 முதல் அமலுக்கு வரும் புதிய MRP விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதுவரை MRP-க்கு மேல் தனியாக வசூலிக்கப்பட்டு வந்த ரூ.10 பாட்டில் காசு, இனி MRP-யிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பாட்டிலின் விலையும்  ரூ.10 மட்டுமே உயர்ந்துள்ளது. பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் அந்த ரூ.10 திரும்பக் கிடைக்கும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.

1) சாதாரண ரகம் (O Range) - 40% விற்பனை ஆகும் ரகம்

  • குவாட்டர் (180ml): பழைய MRP ரூ.140 + தனி பாட்டில் காசு ரூ.10 = இப்போது புது MRP ரூ.150
  • ஹாப் (375ml): பழைய MRP ரூ.280 + ரூ.10 = புது MRP ரூ.290
  • ஃபுல் (750ml): பழைய MRP ரூ.560 + ரூ.10 = புது MRP ரூ.570

மேலும் படிக்க: சாதிப் பெருமை பேசினாரா அமைச்சர் கீர்த்தனா...? அமைச்சர் வன்னி அரசு அளித்த பதில்

2) மீடியம் ரகம் (M Range)

பிராண்டுகள்: MAGNUS CHOICE VSOP BRANDY, POWER VODKA, TRIPLE CROWN VSOP BRANDY, SNJ NO.1 SUPER STRONG

  • குவாட்டர் (180ml): பழைய MRP ரூ.170 + ரூ.10 = புது MRP ரூ.180
  • ஃபுல் (750ml): பழைய MRP ரூ.680 + ரூ.10 = புது MRP ரூ.690

3. பிரீமியம் ரகம் (P Range)

பிராண்டுகள்: EL CANSO DARK RUM, OLD MONK PREMIUM XXX RUM, BRITISH EMPIRE, BACARDI CLASSIC SUPERIOR RUM, MORPHEUS BLUE XO BRANDY

  • குவாட்டர் (180ml): பழைய MRP ரூ.200 + ரூ.10 = புது MRP ரூ.210
  • ஃபுல் (750ml): பழைய MRP ரூ.800 + ரூ.10 = புது MRP ரூ.810

சில உயர்ரக பிராண்டுகள்: KONIGGEN PREMIUM FRENCH BRANDY 1000ml - ரூ.1770, Henry X Special Reserve Brandy XO 1000ml - ரூ.2690, MORPHEUS BLUE XO 750ml - ரூ.141 ஆகிய மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதல் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

நவம்பர் 1 முதல்  எந்த ரகமாக இருந்தாலும் சரி, குவாட்டர், ஹாப், ஃபுல் என எந்த அளவாக இருந்தாலும் சரி, ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இது MRP-யில் சேர்ந்துள்ளது. இது புது வரி அல்ல. ஏற்கனவே வசூலித்த பாட்டில் காசை MRP-யில் கொண்டு வந்த நடவடிக்கை  தான் என அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: முரசு புயல்: சென்னைக்கு ஆபத்தா? 2 நாட்களுக்கு கனமழை.. வெதர்மேன் வார்னிங்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu