SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தீபாவளி பலகாரம் தயாரிப்போர், பொதுமக்கள் கவனத்திற்கு! அரசின் கடும் எச்சரிக்கை

தீபாவளி பலகாரங்களில் ரசாயன நிறங்கள் சேர்க்கத் தடை என்பது உள்ளிட்ட 20 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Nov 02, 2026, 07:02 AM IST | Updated: Nov 02, 2026, 07:22 AM IST
Join

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களை முன்னிட்டு சென்னை மாவட்டம் முழுவதும் இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் தயாரிக்கும் உணவு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய உணவுப் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

மாவட்டத்தில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் அனைத்து உணவு வணிகர்களும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் கட்டாயம் உரிய உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பலகாரக் கூடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் ஆர்டரின் பேரில் பலகாரம் தயாரிப்பவர்களும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு பெற்றே விற்பனை செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சான்றிதழ் நுகர்வோரின் பார்வையில் தெளிவாகத் தெரியும்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

விற்பனை செய்யப்படும் இனிப்புப் பெட்டிகள் மற்றும் பொட்டலங்களில் பலகாரம் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், தயாரிப்பாளரின் முகவரி, உணவுப் பாதுகாப்புத் துறை பதிவு எண், சைவ/அசைவ குறியீடு உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

சில்லறை விற்பனைக் கடைகளில் காட்சிப்படுத்தப்படும் தட்டுகளிலும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை வாடிக்கையாளர்கள் அறியும் வண்ணம் எழுதி வைக்க வேண்டும்.

ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமித்தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களை மட்டுமே அளவோடு பயன்படுத்த வேண்டும். கவர்ச்சிக்காக அதிகப்படியான வண்ணங்களைச் சேர்க்கக் கூடாது.

கார வகை சார்ந்த கார முறுக்கு, ரிபன் பக்கோடா, தட்டு முறுக்கு, சீடை, அப்பம், கார சேவு போன்றவற்றில் Carmoisine, Erythroscene, Fast Green, Metanil Yellow, Orange RN, Rhodamine B, Tartrazine போன்ற ஏழு வகையான செயற்கை வண்ணங்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகள் 100 ppm வரை உபயோகப்படுத்தலாம்.

இனிப்பு வகைகளைச் சார்ந்த குலாப் ஜாமுன், ரசகுல்லா, ரசமலாய், மில்க் பேடா மற்றும் ஜிலேபி, மைசூர்பாக், சோன்பப்டி, மாள்பூ போன்றவற்றில் Orange RN, Metanil Yellow, Rhodamine - B போன்றவை அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்கள் ஆகும். அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகள் 100 ppm வரை உபயோகப்படுத்தலாம்.

பரிசுப் பெட்டிகளில் (Gift Box) பாலால் செய்யப்பட்ட இனிப்புகளைக் குறைந்த காலாவதி காலத்தைக் (குறைந்தபட்சம் 3-5 நாட்கள்) கொண்டிருப்பதால், பிற இனிப்புகளுடன் சேர்த்து பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது விற்பனை செய்யக் கூடாது.

பலகாரங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விவரங்களைத் தகவல் பலகையாகக் கடைகளில் வைக்க வேண்டும்.

எண்ணெய் கொதிநிலையில் இருக்கும்போது அதனுடன் புதிய சமையல் எண்ணெய்யைக் கலக்கக் கூடாது.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது. அத்தகைய எண்ணெயை பயோ-டீசலாக மாற்றும் அரசின் "ரூகோ" (RUCO) திட்டத்தின் கீழ் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைத்து அந்நிறுவனங்களிடமிருந்து உரிய தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

சமையலுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்த வேண்டும் என்பதுடன், அதற்கான தரப் பரிசோதனைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

உணவு தயாரிப்பு மற்றும் கையாளும் பணிகளில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் கையுறைகள், தலைக்கவசம், மேலங்கி அணிந்திருக்க வேண்டும்.

மேலும் மருத்துவத் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பொதுமக்கள் பண்டிகைக் காலப் பலகாரங்களை வாங்கும்போது உணவுப்

பாதுகாப்புத் துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

திறந்த நிலையில் ஈக்கள் மொய்க்கும் நிலையில் உள்ள பலகாரங்களையும், அளவுக்கு அதிகமான ரசாயன நிறங்கள் கொண்ட பலகாரங்களையும் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

வாங்கும் பொருட்களுக்கு உணவுவணிகர்களிடமிருந்து முறையான ரசீது பெற வேண்டும்.

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் லேபிள் விவரங்கள் முழுமையாகவும், சரியாகவும் உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

உணவுப் பொருட்களின் தரம் குறித்த புகார்களுக்கு, உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் foodsafety.tn.gov.in என்ற இணையதளம் அல்லது TN Food Safety Consumer App செயலி மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களைப் பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES