• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தீவிரமாகும் முரசு புயல்! எப்போது கரையை கடக்கும்? கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்

தீவிரமாகும் முரசு புயல்! எப்போது கரையை கடக்கும்? கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்

Murasu Cyclone Latest Update: முரசு புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழை வெளுக்கும் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்து. சென்னை கிழக்கு 180 கி.மீ தொலைவில் முரசு புயல் நிலைக்கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Written ByUmabarkavi K
Published: Nov 02, 2026, 08:24 AM IST|Updated: Nov 02, 2026, 08:32 AM IST
joinshare
தீவிரமாகும் முரசு புயல்! எப்போது கரையை கடக்கும்? கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சுக்கிரன் பெயர்ச்சி: தீபாவளி முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம்.. செல்வம் பெருகும்

சுக்கிரன் பெயர்ச்சி: தீபாவளி முதல் இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகம்.. செல்வம் பெருகும்

2

டாஸ்மாக் கடை அருகே பார் அமைப்பதில் முக்கிய மாற்றம்! புதிய விதிகள் வெளியீடு

3

சாக்கடை அடைப்பு, குடிநீர் குழாய் உடைப்புக்கு இனி உடனடியாக முற்றுப்புள்ளி! அரசின் புதிய திட்டம்

4

தீவிரமாகும் முரசு புயல்! எப்போது கரையை கடக்கும்? கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் அலர்ட்

5

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி 'மெமோ வேட்டு': பணிநீக்க எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Murasu Cyclone Latest Update: மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள “முரசு” (Murasu) புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தீவிர புயலாக வலுவடைந்துள்ளது.

தீவிர புயலாகும் முரசு

இன்று, நவம்பர் 2, 2026 அன்று அதிகாலை 02:30 மணி நிலவரப்படி, இது வட அட்சரேகை 13.6° மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 82.5° ஆகிய ஆயத்தொலைவுகளுக்கு அருகில், அதாவது சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கே-வடகிழக்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே-தென்கிழக்கே 290 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கே-தென்கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், காவலிக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே-தென்கிழக்கே 310 கி.மீ தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது.

ஒங்கோலுக்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 330 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கே 470 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு (இரவு 11:30 மணி) முதல் நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை (காலை 04:00 மணி) வரையிலான இடைப்பட்ட நேரத்தில், நெல்லூர் மற்றும் நரசபூருக்கு இடையே, ஒங்கோலுக்கு அருகில், தீவிர புயலாக தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 120 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் படிக்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி 'மெமோ வேட்டு': பணிநீக்க எச்சரிக்கை!

வெதர்மேன் முக்கிய அலர்ட்

முரசு புயல் தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "முரசு (Murasu) மெதுவாக நகரக்கூடும் அல்லது ஓரிடத்தில் நிலை கொள்ளக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூரில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

முரசு புயல் சென்னைக்குக் கிழக்கே சுமார் 180 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு மேற்கத்திய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிக்கும் இந்தோ-பசிபிக் உயர் அழுத்தப் பகுதிக்கும் இடையில் சிக்க வாய்ப்புள்ளது. இவ்விரு அமைப்புகளும் புயலை வழிநடத்துவதில் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுவதால், நண்பகல் வரை அடுத்த சில மணிநேரங்களுக்கு புயல் மிகவும் மெதுவாக நகரும் அல்லது ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும்.

முரசு புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு வலுவிழந்து, இன்று மாலைக்குள் நெல்லூர் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.  முரசு புயல் இன்று மாலை தொடங்கி, இரவு வெகுநேரம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் தனிமைப்படுத்தப்பட்ட கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நண்பகல் மற்றும் மாலை வேளைகளில், மணிக்கு 30–40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வடக்கு தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தீபாவளி பலகாரம் தயாரிப்போர், பொதுமக்கள் கவனத்திற்கு! அரசின் கடும் எச்சரிக்கை

சென்னை மழைப்பொழிவு அளவு

Pure North Chennai smashing event as usual nothing for South Chennai. North Chennai close to coast 100-150 mm recorded Central Chennai 50-100 mm recorded South Chennai 20-40 mm recorded Areas like Tambaram 10-20 mm recorded.

— Tamil Nadu Weatherman (@praddy06) November 2, 2026

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், வட சென்னையில் கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதிகளில் 100-150 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 50-100 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 20-40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தாம்பரம் போன்ற பகுதிகளில் 10-20 மி.மீ மழை பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு நற்செய்தி: ராணிப்பேட்டையில் புதிய உரம் விற்பனை முறை அமல்
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather