SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: ஒரே நேரத்தில் 130 குண்டு.. மரண பயத்தை காட்டிய 'எம்டன்’ - போரில் சென்னை மீண்டது எப்படி?

Madras Day Explained: சென்னை மாநகரம் தனது 387வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இந்த நாளில் சென்னை மாநகரம் முதல் உலகப் போரை கூட நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறது. இதுகுறித்து பலருக்கு அறியப்படாத விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Aug 22, 2026, 11:41 AM IST | Updated: Aug 22, 2026, 12:09 PM IST
Join

Madras Day Explained:  இந்தியாவின் முக்கியமான அடையாளர்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் திகழ்வது சென்னை. சென்னை என்பது ஒரு நகரம் மட்டுமில்லாமல், பல்வேறு கலாச்சாரங்கள், மக்கள், மொழிகள் கொண்டு திகழ்கிறது. வந்தாரை வாழ வைக்கும் சென்னையில், பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்து மக்கள் வந்து இருக்கின்றனர். இதனால், அனைத்து தரப்பட்ட மக்களும் சென்னையில் வாழ்ந்து வருகின்றனர். இதனால், மதக்கலவரம், சாதி கலவரம்  என்பதை சென்னை காணாத ஒன்றாகா உள்ளது.  

மெட்ராஸ் தினம்

ஆகஸ்ட் 22, 1639ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ மோகன் ஆகியோர் உள்ளுர் நாயக்க மன்னர்களிடம் இருந்து நிலம் வாங்கி மெட்ராஸ் நகரத்தை உருவாக்கினார். மெட்ராஸ் நகரத்தின் பெயர், கடந்த 1996ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை  நகரம் தற்போது வளர்ந்து வரும் தலைநகரக்ஙளில் ஒன்றாக இருக்கிறது. இங்கு சுனாமி,  இயற்கை பேரிடர்கள், போராட்டங்கள் என பல்வேறு இன்னல்களை சென்னை சந்தித்துள்ளது. மேலும், சென்னை நகரம் உலகப் போரை கூட நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறது. இதுகுறித்து  அறியப்படாத சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

முதல் உலகப்  போரை கண்ட சென்னை

1914ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் உலகப் போர் தொடங்கியது. பிரிட்டன் ஜெர்மனிக்கு எதிரான போரில் அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவும் போரின் ஒரு பகுதியாக மாறியது. முதல் உலகப்போரை இந்தியாவிலேயே சென்னை மட்டுமே கண்டது.  

1914 செப்டம்பர் 22 அன்று,   ஜெர்மனி மற்றும் அதன் ஆதரவாளர்களான ஹங்கேரி, ஆஸ்திரியா, ஒட்டோமான் பேரரசு மற்றும் பல்கேரியா ஆகியவற்றின் தாக்குதலை எதிர்கொண்ட ஒரே இந்திய நகரமாக மெட்ரோஸ் அறியப்படுகிறது. 

சுமார் 110 ஆண்டுகளுக்கு முன் நடந்த முதல் உலகப்போர் சமயத்தில் மோதல்கள் நிகழ்ந்தன. இந்த போரில் சென்னையின் கடல் பகுதிகளிலும் குண்டுகள் வீசப்பட்டன.  இந்த நாளில் ஒட்டுமொத்த சென்னை நகரமே ஸ்தம்பித்தது.

சென்னையில் முதல் உலகப் போர் நடந்தது எப்படி?

முதல் உலகப்போர் 1914ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டு வரை நடைபெற்றது.  நேச நாடுகளான பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் இடையே தீவிரமாக நடைபெற்றது. 

முதல் உலகப்போரின் போது, இந்தியா ஆங்கிலேயர்களின் கையில் இருந்தது. அதனால், உலகப் போரின் தாக்கத்தை இந்தியாவை விட்டுவைக்கவில்லை என வரலாறு கூறுகின்றனர்.  அதாவது, ஜெர்மனியின் எஸ்எம்எஸ் எம்டன் என்ற போர்க்கப்பல் குண்டு வீசியது. இதனால், ஒட்டுமொத்த சென்னை நகரமே பபரபரப்பான சூழலுக்கு தள்ளப்பட்டது.

முதல் உலகப்போர் 1914ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டு வரை நடைபெற்றது.  நேச நாடுகளான பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும், மைய நாடுகளான ஹங்கேரி, ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் இடையே தீவிரமாக நடைபெற்றது. 

முதல் உலகப்போரின் போது, இந்தியா ஆங்கிலேயர்களின் கையில் இருந்தது. அதனால், உலகப் போரின் தாக்கத்தை இந்தியாவை விட்டுவைக்கவில்லை என வரலாறு கூறுகின்றனர்.  அதாவது, ஜெர்மனியின் எஸ்எம்எஸ் எம்டன் என்ற போர்க்கப்பல் குண்டு வீசியது. இதனால், ஒட்டுமொத்த சென்னை நகரமே பபரபரப்பான சூழலுக்கு தள்ளப்பட்டது. 

எம்டன் போர்க் கப்பல்

செப்டம்பர் மாதம் சென்னையில் இருந்து 2 கடல் மைல் தொலைவில் எம்டன் கப்பல் நிறுத்தப்பட்டது. கேப்டன் வான் முல்லர் தலைமையில் வந்த இரண்டு கப்பலில், பல்வேறு வீரர்கள் இருந்தனர். செப்டம்பர் 20ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஆங்கிலேயர்கள் மின்சாரத்தை துணடித்து, ஒட்டுமொத்த நகரத்தை இருளில் மூழ்கச் செய்தனர்.

ஆனால், கலங்கரை விளக்கம் மட்டுமே எரிந்து கொண்டு இருந்தது. அந்த வெளிச்சத்தை வைத்து தான், எம்டன் கப்பலில் இருந்து பீரங்கிகள் மூலம் குண்டுகள் வீசப்டட்து.  எம்டன் கப்பல் இருந்த குண்டுகள் வீசப்பட்டதால், சென்னை துறைமுகத்தில் இருந்த எண்ணெய் கிடங்குகள் வெடித்து சிதறின. எம்டன் கப்பல் துறைமுகத்தின் மீது கிட்டதட்ட 130 குண்டுகளை வீசியது. இதனால், இதனால், இரண்டு பிரம்மாண்டமான எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் முற்றிலுமாக அழிந்தது.

அதுமட்டுமின்றி, இரண்டு கப்பல்கள் முற்றிலுமாக அழிந்தன. அஞ்சல் அலுவலகம், துறைமுக கட்டிடம், உயர் நீதிமன்றம் கட்டிடம் அனைத்து சேதம் அடைந்தன. எம்டன் கப்பலில் இருந்து வீசப்பட்ட குண்டு ஒன்று, சென்னை ஐகோர்ட்டு சுற்றுச்சுவர் மீது விழுந்து வெடித்ததில், அந்த சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது. 

மற்றொரு குண்டு வெடிக்காமல் ஐகோர்ட்டு வளாகத்திலேயே கிடந்தது. தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு, எம்டன் கப்பல் சென்றுவிட்டது. எம்டன் கப்பலை தாக்க ஆங்கிலேயர்கள் முயற்சித்தனர். ஆனால், ஆங்கிலேயர்களால் அந்த கப்பலிடம் நெருங்க கூட முடியவில்லையாம். ஆனால், 1914ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம தேதி ஆஸ்திரேலியா போர் கப்பலால் எம்டன் கப்பல் சுட்டு வீழ்த்தப்பட்டது என வரலாறு கூறுகறது.

நினைவு கல்வெட்டு

அடையாளம் தெரியாத நிலை

111 ஆண்டுகளை கடந்துவிட்ட போதிலும் , சென்னையில் எம்டன் கப்பல் குண்டு வீசியதை நினைவுகூரும் படியான அடையாளங்கள் எதுவும் சொல்லும்படியாக  இல்லை என்றே கூறவேண்டும் . சாலையில் உள்ள மைல் கல்லைப்போல, இதற்கான நினைவு கல்வெட்டு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

பிரபலமான எம்டன் பெயர்

இந்த தாக்குதலுக்கு பிறகு, எம்டன் என்ற பெயர் மெட்ராஸ்மக்களின் நினைவில் ஆழமாக பதிந்தது. மிகுந்த துணிச்சலுடன் செயல்படுபவர்களை குறிக்க தமிழில் ‘எம்டன்’ என்ற சொல் பயன்படுத்தப்படும் அளவுக்கு இந்த நிகழ்வு தாக்கத்தை ஏற்படுத்தியது. உலக வரலாற்றிலும், தமிழ் மொழி வரலாற்றிலும் தனித்துவமான இடத்தைப் பெற்ற இந்த சம்பவம், சென்னையின் மறக்க முடியாத வரலாற்றுப் பக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES