SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: பயணிகளுக்கு குட் நியூஸ்... இணைப்பு பேருந்துகள் இயக்கம்

Poonamallee Vadapalani Metro: பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. பூந்தமல்லி பைபாஸ் - போரூர் சந்திப்பு - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Written By Umabarkavi K
Published: Oct 11, 2026, 09:49 AM IST | Updated: Oct 11, 2026, 10:00 AM IST
Join

Chennai MTC Buses Latest News: சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி பைபாஸ் - போரூர் சந்திப்பு - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து இணைப்பு பேருந்து சேவையை மேம்படுத்தவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ சேவை

சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்தில்  வடபழனி - பூந்தமல்லி வழித்தடத்தில் இன்று (அக்டேபார் 11) மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி இன்று வடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்க உள்ளார்.   பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான 14.64 கிலோமீட்டர் நீளமுள்ள வழித்தடம்-4 மஞ்சள் பாதையை அவர் திறந்து வைக்க உள்ளார். தற்போது சாலை வழியாக பூந்தமல்லியில் இருந்து வடபழனி செல்ல ஒரு மணி நேரத்துக்கும் மேலாகும் நிலையில், மெட்ரோ சேவை தொடங்கப்பட்டால் இந்த பயண நேரம் சுமார் 20 முதல் 25 நிமிடங்களாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வடபழனி ஏற்கனவே மெட்ரோ முதல் கட்டப் பாதையில் செயல்படும் முக்கிய நிலையமாக உள்ளது. இரண்டாம் கட்டப் பாதையும் வடபழனியுடன் இணைவதால், அங்கிருந்து மெட்ரோ ரயிலை மாற்றிப் பயணித்து விமான நிலையம், சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்வது எளிதாகும். இதனால், சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்க: பிரதமர் மோடி வருகை... சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு

பூந்தமல்லி பைபாஸ் - போரூர் சந்திப்பு - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து இணைப்பு பேருந்து சேவையை  மேம்படுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பின்படி, சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ். புதிதாக அமையவுள்ள பூந்தமல்லி போரூர் வடபழனி வழித்தடத்தில் பயணிகளுக்கான தடையற்ற பயணத்தை உறுதி செய்ய சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

பூந்தமல்லி போரூர் வடபழனி வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களை நகரின் பல்வேறு பகுதிகளுடன் இணைக்கும் வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் பயணிகள் எளிதாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதுடன், மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கு இடையே சிரமமின்றி பயணிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தங்கள் அமைந்துள்ளதால், பயணிகள் பேருந்துகளை எளிதில் பயன்படுத்த முடியும். பூந்தமல்லி போரூர் வடபழனி வழித்தடத்தில் மொத்தம் 11 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைந்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வழியாக இருமார்க்கங்களிலும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் கீழ்கண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதாவது, பூந்தமல்லி பைபாஸ் மெட்ரோ, பூந்தமல்லி பேருந்து நிலையம் மெட்ரோ, பூந்தமல்லி அரசு மருத்துவமனை மெட்ரோ, கரையான்சாவடி மெட்ரோ, குமணன்சாவடி மெட்ரோ, காட்டுப்பாக்கம் மெட்ரோ, அய்யப்பன்தாங்கல், தெள்ளியகரம், போரூர் பைபாஸ் மெட்ரோ, போரூர் மெட்ரோ, வடபழனி மெட்ரோ ஆகிய பேருந்து முனையங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரோ சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் சூப்பர் வேலை: தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் 9 காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஒவ்வொரு மெட்ரோ இரயில் நிலையத்திலும் பயணிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் பேருந்து நிறுத்தங்களின் இடங்கள் குறிப்பிடபட்டுள்ளன.மேலும், பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அவர்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் மற்றும் பயணத் தேவைகளின் அடிப்படையில் கூடுதல் பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாநகரப் போக்குவரத்துக் கழகமும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனமும் இணைந்து ஆய்வு மேற்கொள்ளும்.

அதேபோல், ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் பேருந்து சேவைகளை எளிதில் அணுகுவதற்காகத் தனிப்பட்ட பேருந்து நிறுத்தங்களை ஏற்படுத்துவதற்கான தேவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும். இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள். பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சென்னையில் வசிக்கும் மக்கள் பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன என மாநகர போக்குவரத்து கழகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் படிக்க: சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES