• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /குருவின் டபுள் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. நவம்பர் முதல் பொற்காலம்!

குருவின் டபுள் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. நவம்பர் முதல் பொற்காலம்!

Guru Peyarchi: ஒரே நாளில் குரு பகவான் நட்சத்திரம் மற்றும் ராசியை மாற்ற உள்ளார். அக்டோபர் 31ஆம் தேதி மக நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய உள்ளார். அதே நேரத்தில், குரு பகவான் கடக ராசியில் இருந்து வெளியேறி சிம்ம ராசியில் நுழைகிறார். இதனால், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை உண்டாக்கும்.

Written ByUmabarkavi K
Published: Oct 11, 2026, 10:50 AM IST|Updated: Oct 11, 2026, 11:00 AM IST
joinshare
குருவின் டபுள் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. நவம்பர் முதல் பொற்காலம்!

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
கிலோ வெங்காயம் ரூ.35.. ரேஷன் கடையில் எத்தனை முறை வாங்கலாம்?  தமிழக அரசு அறிவிப்பு!

கிலோ வெங்காயம் ரூ.35.. ரேஷன் கடையில் எத்தனை முறை வாங்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு!

2

அபிஜீத் திப்கே விடுதலை... ஆனால் நீதிமன்றம் போட்ட முக்கிய நிபந்தனை - போராட்டம் தொடருமா?

3

ஹர்திக் பாண்டியா KKR அணிக்கு மாறுகிறாரா? கேப்டன்சி முதல் மிடில் ஆர்டர் வரை.. என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?

4

குருவின் டபுள் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. நவம்பர் முதல் பொற்காலம்!

5

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: பயணிகளுக்கு குட் நியூஸ்... இணைப்பு பேருந்துகள் இயக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Guru Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக குரு பகவான் அறியப்படுகிறார். குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் பெயர்ச்சி 12 ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்து. அந்த வகையில், அக்டோபர் மாதம் இறுதியில் குருவின் இரட்டை பெயர்ச்சி நடக்கிறது. அக்டோபர் 31ஆம் தேதி குரு பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழைகிறார். மேலும், குரு பகவான் அக்டோபர் 31ஆம் தேதி மக நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார்.  குரு  ஒரே நாளில் தனது நட்சத்திரம்  மற்றும் ராசியை மாற்றுவது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வத்தை கொடுக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.  

மேஷம் (Aries Zodiac Sign)

குரு பகவானின் இரட்டை பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். மேஷ ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். விவசாய பணிகளில் ஆதரவான சூழ்நிலை காணப்படும். 

தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனை செயல்களில் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் விவேகம் வேண்டும். தொழில் செயல்பாடுகளில் புதிய ஆலோசனைகள் கிடைக்கும். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் தோன்றி மறையும். மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான கல்வி சார்ந்த உதவிகள் கிடைக்கும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.

மேலும் படிக்க: சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்.. தொழிலில் முன்னேற்றம்!

கடகம் (Cancer Zodiac Sign)

குருவின் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும். குருவின் பெயர்ச்சியால் நிதி நிலைமை மேம்படும். இநத் காலக்கட்டத்தில் நினைத்த காரியங்கள் அனைத்தும் மேம்படும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் பிறக்கும். வியாபார மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். 

கல்வி பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். கலைத் துறைகளில் புதுமையான சூழல் உண்டாகும். வழக்கு செயல்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பங்களும் மன அமைதியின்மையும் உண்டாகும். செய்கின்ற முயற்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இன்சூரன்ஸ் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும்.

விருச்சிகம் (Scorpio Zodiac Sign)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பகவான் நேர்மறையான ஆற்றலை கொடுக்கும்.  உங்களுக்கு இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் தீரும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். 

வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். புதிய வேலைக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும்.

மேலும் படிக்க: மிதுனத்தில் சேரும் சுக்கிரன் - சந்திரன்: இந்த 3 ராசிகளுக்கு வெற்றி வந்துசேரும்...
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Peyarchi