SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை, கட்டணம் இதோ

Poonamallae - Vadapalani Metro Rail: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4- மஞ்சள் வழித்தடத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்து மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

Written By Umabarkavi K
Published: Oct 11, 2026, 08:26 AM IST | Updated: Oct 11, 2026, 08:45 AM IST
Join

Poonamallae - Vadapalani Metro Rail: பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை இன்று (அக்டோபர் 11) தொடங்கப்பட உள்ளது. இன்று பிரதமர் மோடி பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை துவங்கி வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு, மெட்ரோ ரயில்கள் இயங்கும் காலை அட்டவணை குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-2 வழித்தடம் 4-ல், பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில்  அக்டோபர் 11, 2026 முதல் மெட்ரோ இரயில் பயணிகள் சேவை தொடங்கப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

நிறுத்தங்கள் - பூவிருந்தவல்லி புறவழிச்சாலை, பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை, கரையான் சாவடி, குமணண் சாவடி, காட்டுப்பாக்கம். அயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகிய 11 மெட்ரோ இரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம்

தொடக்க நாளான 11 அக்டோபர் 2026 அன்று, மெட்ரோ இரயில் சேவைகள் மாலை 4 மணி முதல் தொடங்கி, இரு திசைகளிலும் இரவு 9 மணி வரை இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மறுநாளான 12 அக்டோபர் 2026 முதல், இந்த 15 கி.மீ. நீளமுள்ள வழித்தடத்தில் இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும்.

 

 

ரயில்கள் இயக்கப்படும் இடைவெளி

நாள்தோறும் இரு முனையங்களிலிருந்தும் (பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ மற்றும் வழித்தடம் 4 வடபழனி மெட்ரோ) கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 9 மணிக்கு புறப்படும் என்றும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மஞ்சள் வழித்தடத்தில் கட்டணம் விவரம்

பூந்தமல்லி டூ போரூர் சேவைமெட்ரோ கட்டணம்

பூந்தமல்லி - பூந்தமல்லி பேருந்து நிலையம்
ரூ.10
 
பூந்தமல்லி அரசு மருத்துவமனை நிறுத்தம்ரூ.20

கரையான்சாவடி நிறுத்தம்  

 

ரூ.20
குமணஞ்சாவடி நிறுத்தம் 
 
ரூ.20

காட்டுப்பாக்கம் நிறுத்தம்  

 

ரூ.20
அய்யப்பன்தாங்கல் நிறுத்தம் 
 
ரூ.30
தெள்ளியரகரம் நிறுத்தம் 

ரூ.30

 

போரூர் புறவழிச்சாலை நிறுத்தம்

 

ரூ.30
போரூர் சந்திப்பு நிறுத்தம் ரூ.30
வடபழனி நிறுத்தம்ரூ.40
Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES