• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை, கட்டணம் இதோ

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை, கட்டணம் இதோ

Poonamallae - Vadapalani Metro Rail: சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4- மஞ்சள் வழித்தடத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் நேரம் குறித்து மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

Written ByUmabarkavi K
Published: Oct 11, 2026, 08:26 AM IST|Updated: Oct 11, 2026, 08:45 AM IST
joinshare
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை, கட்டணம் இதோ

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ இன்று திறப்பு.. PM மோடியுடன் விஜய் பயணம்! புதிய திட்டங்கள் என்ன?

2

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ: 10 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் இயக்கம்.. நேர அட்டவணை, கட்டணம் இதோ

3

கடலில் ஒரு மிதக்கும் நகரம்! மும்பை வந்த ‘கார்டெலியா ஸ்கை’ சொகுசு கப்பல் – பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

4

திருச்சி வேலைவாய்ப்பு: 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஈப்பு ஓட்டுநர் பணி

5

மருத்துவச் செலவுகளுக்கும் கை கொடுக்கும் ஓய்வூதியத் திட்டம் – முழு விவரம் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Poonamallae - Vadapalani Metro Rail: பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை இன்று (அக்டோபர் 11) தொடங்கப்பட உள்ளது. இன்று பிரதமர் மோடி பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை துவங்கி வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு, மெட்ரோ ரயில்கள் இயங்கும் காலை அட்டவணை குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-2 வழித்தடம் 4-ல், பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில்  அக்டோபர் 11, 2026 முதல் மெட்ரோ இரயில் பயணிகள் சேவை தொடங்கப்படுகிறது என்பதை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

நிறுத்தங்கள் - பூவிருந்தவல்லி புறவழிச்சாலை, பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனை, கரையான் சாவடி, குமணண் சாவடி, காட்டுப்பாக்கம். அயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் புறவழிச்சாலை, போரூர் சந்திப்பு மற்றும் வடபழனி ஆகிய 11 மெட்ரோ இரயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம்

தொடக்க நாளான 11 அக்டோபர் 2026 அன்று, மெட்ரோ இரயில் சேவைகள் மாலை 4 மணி முதல் தொடங்கி, இரு திசைகளிலும் இரவு 9 மணி வரை இயக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மறுநாளான 12 அக்டோபர் 2026 முதல், இந்த 15 கி.மீ. நீளமுள்ள வழித்தடத்தில் இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ இரயில் சேவைகள் இயக்கப்படும்.

 

Chennai’s commute just got a major upgrade! 🚆 Starting October 11, 2026, CMRL’s new Corridor 4 - Yellow Line is officially open, connecting Poonamallee Bypass to Vadapalani across 11 amazing stations! Experience faster, seamless travel and check out the schedule swipe-by-swipe. Here’s to happier, easier journeys! #ChennaiMetro #CMRL #MetroUpdate

— Chennai Metro Rail (@cmrlofficial) October 10, 2026

 

ரயில்கள் இயக்கப்படும் இடைவெளி

  • பூந்தமல்லி  முதல் வடபழனி மெட்ரோ இடையே மெட்ரோ ரயில் கால அட்டவணை மற்றும் ரயில் இயக்க இடைவெளி குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை  பீக் ஹவரில் காலை 8 மணி முதல் 11 மணியும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
  • பீக் ஹவர் இல்லாத காலை 7 மணி முதல் 8 மணி வரையும்,  நண்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரையும், இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரையும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இய்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாள்தோறும் இரு முனையங்களிலிருந்தும் (பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ மற்றும் வழித்தடம் 4 வடபழனி மெட்ரோ) கடைசி மெட்ரோ இரயில் சேவை இரவு 9 மணிக்கு புறப்படும் என்றும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மஞ்சள் வழித்தடத்தில் கட்டணம் விவரம்

பூந்தமல்லி டூ போரூர் சேவைமெட்ரோ கட்டணம்

பூந்தமல்லி - பூந்தமல்லி பேருந்து நிலையம்
ரூ.10
 
பூந்தமல்லி அரசு மருத்துவமனை நிறுத்தம்ரூ.20

கரையான்சாவடி நிறுத்தம்  

 

ரூ.20
குமணஞ்சாவடி நிறுத்தம் 
 
ரூ.20

காட்டுப்பாக்கம் நிறுத்தம்  

 

ரூ.20
அய்யப்பன்தாங்கல் நிறுத்தம் 
 
ரூ.30
தெள்ளியரகரம் நிறுத்தம் 

ரூ.30

 

போரூர் புறவழிச்சாலை நிறுத்தம்

 

ரூ.30
போரூர் சந்திப்பு நிறுத்தம் ரூ.30
வடபழனி நிறுத்தம்ரூ.40
Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai